வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில்
வேளாங்கண்ணி இரஜதகிரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-வேதாரண்யம் சாலையில் நாகப்பட்டினத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுபனி சூழந்த நிலையில் சூரிய வெளிச்சத்தில் வெள்ளியைப் போலப் பிரகாசிப்பதால் கயிலாயத்தை வெள்ளியங்கிரி என்றழைப்பர். வெள்ளியங்கிரிநாதரான சிவபெருமான் இங்கு இரஜதகிரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேல்நெடுங்கண்ணி ஆவார்.[1]
சிறப்பு
தொகுசிக்கல் கோயிலில் முருகப்பெருமானுக்கு சக்தி வேலைத் தந்து அருளிய பெருமை வேல்நெடுங்கண்ணிக்குரியதாகும். இக்கோயிலில் ஆடி மாதம் தீமிதித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.[1]