வேளாண் உயிரி-பாதுகாப்பு ஆணையம்
வேளாண் உயிரி-பாதுகாப்பு ஆணையம் (Agricultural Bio security Bill) என்பது இந்திய அரசால் நடுவண் வேளாண்மைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள சட்ட முன்வரைவு (மசோதா) ஆகும்.
நோக்கம்
தொகு- உலகமயமாக்கலின் விளைவாக இந்திய வேளாண்மையைச் சீர்குலைக்கும் வகையில் மோசமான களைத் தாவரங்களும் உணவு தானியங்களும், விளைநிலத்தில் களைகளும், பயிர்களைத் தின்னும் பூச்சிகளும், வணிக இறக்குமதியின் மூலம் இந்தியாவிற்குள் புகுத்தப்படுகிறது. வெளிநாட்டவர் மற்றும் இந்தியர் சிலராலும் நம் நாட்டுக்குள் வந்து சேரும் விலங்குகள், செடிகொடிகள், பூச்சிகள், தாவரம், வளர்ப்புப் பிராணி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் ஆகியவற்றால் மனிதருக்கு பல விதமான நோய்கள் வருகிறது. மரபணு பொறியியல் வளர்ச்சி காரணமாக புதிய நுண்ணுயிர்கள் வந்துவிடாதபடி தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அழித்தொழிக்கவும் இந்த ஆணையம் செயல்படும்.
- இந்தியாவில் அதிகரித்துவரும் பயோ-தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும் வரும் ஆபத்தினை முறையாக மதிப்பிடவும், மேலாண்மை செய்யவும் இந்த ஆணையத்தின் வழியாக தடுக்கப்படும்.