வே. இராஜகுரு

வே. இராஜகுரு என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் பள்ளியளவில் மாணவர்களின் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டி பதிவு செய்யப்படாத பல்வேறு தொல்லியல் தடயங்களையும் வரலாற்று பதிவுகளையும்[1] ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். ஆங்கிலப் பாடத்தில் முதுநிலை நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்.

தொல்லியல் ஆய்வுகள் தொகு

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சமணத் தடயங்களை[2] அடையாளப்படுத்தியுள்ளார். குறிப்பாக இவரால் கண்டுபிடிக்கப்பட்ட சமணப்பள்ளி[3] சமணத்தை பற்றி ஆய்வு மேற்கொள்பவர்களிடையே வரவேற்பை பெற்றதோடு சமண மத தடயங்கள் குறித்த சிறிய புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

திருப்புல்லாணி கோவிலில் சேதுபதி மன்னர்கள்[4] காலத்தில் திருடனை பிடித்து கொடுத்த வீரனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறித்து தமது மாணவிகள் வாயிலாக வெளிப்படுத்தி முத்து வீரப்பன் எனும் அந்த வீரனை அடையாளப்படுத்தியதோடு கேட்பாரற்று இருந்த அந்த சிலை தற்போது வரலாற்று சான்றாக நிற்கிறது.

கழுமர வழிபாட்டு முறைகளையும் கழுவேற்றம்[[5] குறித்த பல்வேறு சமூக பண்பாட்டு சான்றுகளை தமது கள ஆய்வின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார் .

இவர் கல்வெட்டு படியெடுத்தல் , கல்வெட்டு எழுத்துகளை அடையாளம் கண்டு வாசிப்பதற்கான பயிற்சிகள், தொல்லியல் சான்றுகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். இதனால் இவரது மாணவிகள் ஓலைச்சுவடிகள், புதிய கல்வெட்டுகள்[6] ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளதோடு ஊடகங்கள் வாயிலாக தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் தொகு

இம்மன்றத்தின் தலைவராக பணியாற்றும் இவர் இவமைப்பை நிறுவி பத்திரிக்கையாளர்கள் தொல்லியல் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்டு இயங்கி வருகிறார். இவ்வமைப்பின் சார்பாக பல்வேறு தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றம் தொகு

இவ்வமைப்பை கடந்த எட்டு ஆண்டுகளாக தமது பள்ளியில் நிறுவி மாணவர்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாறு[7] சார்ந்த பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.இவரது மாணவர்கள் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈர்க்கும் வகையில் இம்மன்றம் இயங்கி வருகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._இராஜகுரு&oldid=3193204" இலிருந்து மீள்விக்கப்பட்டது