வைகுண்டம் காத்திருப்பு வளாகம்
வைகுண்டம் காத்திருப்பு வளாகம் (Vaikuntam Queue Complex) திருமலை வெங்கடாசலபதி கோயில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களை நெறிப்படுத்தி மேலாண்மை செய்யத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினால் ஏற்படுத்தப்பட்ட வசதியாகும். இந்த வளாகமே அனைத்து தரிசனங்களுக்கும் செல்வதற்கான நுழைவு பகுதியாகச் செயல்படுகிறது, ஆனால் ஒரு சில விதிவிலக்குகளும் உள்ளன.
வரலாறு
தொகு1970களின் நடுப்பகுதியில் திருப்பதி மற்றும் திருமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகை திடீரென அதிகரித்தது. திருமலையில் உள்ள மலைகளில் நூற்றுக்கணக்கான தங்குமிடங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியது. ஆனால் கூட்டத்தினை முழுமையாக நிர்வாகத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. பக்தர்களை நடத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், கோயிலுக்கு வெளியையும், உச்ச காலங்களில் 4 மட வீதிகளைச் சுற்றியும் தரிசனத்திற்காகப் பக்தர்களின் கூட்டம் வரிசை வரிசையாக காணப்பட்டன. ஸ்ரீ பி.வி.ஆர்.கே பிரசாத் (நிர்வாக அதிகாரி) மற்றும் பொ.நாகி ரெட்டி (தலைவர், அறங்காவலர் குழு) ஆகியோரின் தலைமையில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகக் குழு இச்சிக்கலான பிரச்சனைக்கு தீர்வுக்கான திட்டமிட்டது. இதன்படி கூட்டத்தினை மேலாண்மை செய்யவும் 14,000 பேரை நிர்வகிக்கும் வகையில் காத்திருப்பு வளாகத்தினை நிறுவத் திட்டமிடப்பட்டது.[1] இதற்கான பணிகள் 1980இல் தொடங்கி 1983இல் நிறைவடைந்தது. அப்போதைய முதல்வர் என்.டி.ராமராவ், 1983ஆம் ஆண்டில் இந்த வசதியைப் பக்தர்களுக்குத் தொடங்கிவைத்தார்.[2]
1985ஆம் ஆண்டில் கோயிலின் வடமேற்குப் பகுதியில் கூடுதல் அறைகள் மூலம் வரிசை வளாகத்தில் சேர்க்கப்பட்டன. ஆனால் அவை அகற்றப்பட்டு 2000ஆம் ஆண்டில் இரண்டாவது வரிசை வளாகத்தில் இணைக்கப்பட்டது. இது முதல் வரிசை வளாகத்திலிருந்து சாலையின் கீழ் குதியில் அமைந்துள்ளது அமைந்துள்ளது.
தற்போது, காத்திருப்பு வளாகம் -1ல் (பழையது) அர்ஜிதா சேவா, சிறப்புத் தரிசனம் (கட்டண தரிசனம்), செல்லர் சீட்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வழங்குகிறது. சர்வாதர்ஷனை (இலவச நுழைவு) தேர்வு செய்யும் பக்தர்கள் வரிசை வளாகம் -2 (புதியது) மூலம் அனுப்பப்படுகிறார்கள்.
காத்திருப்பு வளாகம்
தொகுவைண்டம் காத்திருப்பு வளாகம் அரை வட்டக் கட்டட அமைப்பினை உடையது, இதனைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கின்றது. இதன் ஒரு பகுதியில் தோட்டம் உள்ளது.[3] இந்த வளாகம் கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது; இது கோயிலினை தெற்கு மாட் தெருவிலிருந்து பிரிக்கின்றது. இந்த கட்டிடம் மொத்தம் 3 நிலைகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு நிலையிலும் 19 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 2 கதவுகள் உள்ளன - ஒன்று பக்தர்களை அறைக்குள் அனுமதிக்க மற்றொன்று பக்தர்களைக் கோயிலுக்குச் செல்லும் நடைபாதையில் நுழைய. தாழ்வாரங்கள் கோயிலின் தென்கிழக்கு முனையுடன் மேல்நிலை பாலம் மூலம் இணைகின்றன. பக்தர்கள் இறுதியாக முதன்மை கோபுரம் வழியாகக் கோவிலுக்குள் நுழைகிறார்கள். பல்வேறு நடவடிக்கைகளுக்காகக் கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கோபுரம் வழித்தடத்தில் 2 வரிசைகளாகச் செல்லும் போது அவர்களை ஒழுங்குபடுத்த உதவியாளர்கள் உள்ளனர்.
அம்சங்கள்
தொகுஅடிப்படை வசதிகள்
தொகுஇந்த வளாகத்தில் காத்திருப்போருக்கு இலவச உணவு, பால், சுகாதார தேவைகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு காத்திருப்பு அறையிலும் எல்.ஈ.டி தொலைக்காட்சி திரையின் மூலம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி அலைவரிசை (எஸ்.வி.பி.சி) காட்சிகள் திரையிடப்படுகின்றன. இது தி.தி.தேவஸ்தானத்திற்கு சொந்தமான பக்தி அலைவரிசை.[4]
பாதுகாப்பு
தொகுவைகுண்டம் காத்திருப்பு வளாகத்தின் நுழைவாயிலில் காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் கோயில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர். அர்ஜிதா சேவா சீட்டு வைத்திருப்பவர்களை, வளாகத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பு அவர்களின் தரிசன நுழைவுச்சீட்டுகள் முறையாகச் சரிபார்க்கப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் அல்லது சேவா, அறையின் இருப்பிடத்தை அடையாள பல்வேறு வழிகாட்டு தகவல்கள் அறிவிப்புப் பலகைகளாக ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. அறைக்கு வெளியே, தரிசன சீட்டு கைரேகைகளுடன் சரிபார்க்கப்படுகிறது. இந்நேரத்தில் வழங்கப்பட்ட தரவுகளிலிருந்து பயோமெட்ரிக் முறையில் முக பொருத்தங்கள் சரிசெய்யப்படுகிறது. கோயிலுக்குள் நுழைவதற்குச் சற்று முன்பு, பக்தர்களிடம் உள்ள கைப்பைகளைச் சோதனை செய்ய உடமைகளைச் சோதனை செய்யும் வருடி உள்ளது. கைப்பேசிகளை எடுத்துச்செல்வதைப் பக்தர்கள் தவிர்க்கவேண்டும். கைப்பேசி மற்றும் புகைப்படக் கருவிகளுடன் வரும் பக்தர்கள் அவற்றைப் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லவேண்டும் எனவே, தரிசனத்தை இது தாமதப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தும். வைகுண்டம் காத்திருப்பு வளாகம் முழுவதும் கண்காணிப்பு வீடியோபடக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindu : TTD condoles B.Nagi Reddy". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ Ramesan, N. (1981). The Tirumala Temple. Tirumala: Tirumala Tirupati Devasthanams.
- ↑ https://www.facebook.com/TirumalaTirupatiDevasthanams.TTD/photos/vaikuntam-queue-complexthe-entrance-for-darshan-is-through-the-vaikuntam-queue-c/198693866833272/
- ↑ https://www.tirumala.org/Sarvadarshanam.aspx