வைட்லி விருது (ஐ இரா)
வைட்லி விருது (Whitley Awards) என்ற விருது ஒவ்வொராண்டும் வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர் எனும் அமைப்பால், வழங்கப்பட்டு வருகிறது. இது காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உலகளாவிய அதிகபட்ச அங்கீகாரமாக கருதப்படுகிறது. இந்த விருதின் மதிப்பு £35,000 (2017) ஆகும். மேலும் இந்த விருது ‘பசுமை ஆஸ்கர்’ என்று போற்றப்படுகிறது.[1] இந்த விருதானது குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு வெளியில் உள்ள காட்டுயிர்களின் பாதுகாப்பிற்காக போராடுபவர்களை அங்கீகரிக்க முயல்கின்றது, மேலும் இவர்களின் பணிகளை பன்னாட்டளவில் கவனத்துக்கு கொண்டுவந்து, இப்பணிகளுக்கு நீண்டகால அடிப்படையில் உதவியும், பாதுகாப்பும் அளிக்கும் விதத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.
வைட்லி விருதானது சுற்றுச்சூழலியலாளர் எட்வர்ட் வைட்லியால் 1994 இல், £15,000 மதிப்புள்ள ஒற்றை விருதாக உருவாக்கப்பட்டது.
வைட்லி தங்க விருது
தொகுஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டில் வைட்லி விருது வென்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வைட்லி தங்க விருதை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவர். இந்த விருதின் மதிப்பு £50,000 ஆகும் இத்தொகை விருது பெறுபவரின் ஓராண்டு திட்டச் செலவுக்கு பயன்படுத்தும் வகையிலானது.
தி விட்லி-சேக்ரே பாதுகாப்பு நிதியம்
தொகுதி விட்லி-சேக்ரே பாதுகாப்பு நிதியம் (WSCF) என்பது முந்தைய ஆண்டுகளில் விட்லி விருது வென்றவர்களுக்கு அவர்களின் அடுத்த திட்டங்களை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி வழங்கும் ஒரு ஆண்டுத் திட்டம் ஆகும், இதைக் கொண்டு மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள ஆபத்துக்கு உள்ளான உயிர் இனங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை காக்க செலவிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள்
தொகு- ராண்டல் அரூஸ் (2004)
- சாண்ட்ரா பெஸ்யூடோ (2007)
- அலெக்சாண்டர் அர்பாக்காவோவ் (2006)
- காகன் செகெர்கியோகுலு (2008 & 2013): இரண்டு முறை விட்லி தங்க விருது வென்றவர் இவர் மட்டுமே
- அபராஜிதா தத்தா (2013)[2]
- கிளாடிஸ் கலேமா-ஸிகுசோகா (2009)
- மைசூர் துரேஸ்வாமி மதுசுதன் (2009)
- ஜீனா டூஸ் (2005)
- கா ஹா வா (2004)
- உரோமுலசு விட்டேக்கர் (2005)
- அமண்டா வின்சென்ட் (1994)[3]
- பூர்ணிமா தேவி பர்மன் ( 2017)[4]
- அஷ்விகா கபூர் (2014)
- டாக்டர் பிரமோத் பாட்டீல் மற்றும் டாக்டர் ஆனந்த குமார் (2015)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.bbc.co.uk/nature/27324314
- ↑ "Hornbill conservator Aparajita Datta gets Whitley Award". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-07-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130726044712/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-03/flora-fauna/39008513_1_hornbills-conservation-whitley-fund. பார்த்த நாள்: 29 July 2013.
- ↑ "WhitleyAward.org". Whitley Award. பார்க்கப்பட்ட நாள் 24 June 2013.
- ↑ http://m.indiatoday.in/story/environmentalist-purnima-devi-barman-wins-green-oscar/1/958872.html