வைப்போமா
வைப்போமா (VIPoma ) அல்லது வெர்னர்-மோரிசன் கூட்டறிகுறி என்பது குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறுகளைத் (Vasoactive intestinal peptide) தோற்றுவிக்கும் கணையத்திலுள்ள சிறு திட்டுகளில் தோன்றும் மிக அரிதான அகச்சுரப்பித் தொகுதிப் புற்றுநோயாகும்.[1] கணைய உள்சுரப்பிப் புற்று என்னும் இந்நோய், பத்து லட்சத்தில் ஒருவருக்கே தோன்றுவதாக அறியப்படுகிறது.[2]
அறிகுறிகள்
தொகு- வயிற்று வலி, தசைபிடிப்பு, குமட்டல்
- உணவு எடுத்துக்கொள்ளாத போதும் அதிக அளவில் நீர்த்த மலம் கழித்தல்
- உடல் எடைகுறைவு, நீர்சத்து இழப்பு
- முகம் சிவந்து இருத்தல்
- குருதியில் பொட்டாசியத்தின் அளவு குறைவு
பொதுவாக ஐம்பது வயதினைக் கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பெருமளவில் ஆண்களைவிடப் பெண்களிடம் இந்நோய் தோன்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவம்
தொகுஅறுவை மருத்துவம் நல்ல பயனைக்கொடுக்கிறது. நோய் பிற இடங்களுக்குப் பரவிய நிலையில் குணமாவது சற்றுக் கடினம். இரத்ததில் புரதக்கூறு அளவினைக் கணக்கிட்டு நோயினைத் தெரிந்து கொள்ளலாம். ஐம்பதிற்கும் அதிக அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதங்களை தோற்றுவிக்கின்றன. ஐம்பதை விடக்குறைந்த அமினோ அமிலங்கள் இணைந்து பெப்டைடுகளைத் தோற்றுவிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Islet cell tumor and a syndrome of refractory watery diarrhea and hypokalemia". Am J Med 25 (3): 374–80. Sep 1958. doi:10.1016/0002-9343(58)90075-5. பப்மெட்:13571250. http://linkinghub.elsevier.com/retrieve/pii/0002-9343(58)90075-5.
- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் VIPoma