வையார்டைட்டு

CaU5+(UO2)2(CO3)O4(OH)•7H2O

வையார்டைட்டு (Wyartite) என்பது CaU5+(UO2)2(CO3)O4(OH)•7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1902-1992 ஆண்டு காலத்தைச் சேர்ந்த பிரான்சு நாட்டுக் கனிமவியலாளர் யீன் வையார்ட்டு இக்கனிமத்தைக் கண்டறிந்த காரணத்தால் வையார்டைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது. கருப்பு, கருமை கலந்த பச்சை அல்லது கருமை கலந்த ஊதா நிறத்தில் ஒளிகசியும் அல்லது ஒளிபுகா செஞ்சாய்சதுர படிகங்களாக 3-4 என்ற மோவின் கடினத்தன்மையும் கொண்டு வையார்டைட்டு காணப்படுகிறது. லாந்தினைட்டு, வையார்டிட்டு, வையார்டிட்டா என்ற வேரு பெயர்களாலும் இக்கனிமம் அறியப்படுகிறது. கோங்கோ நாட்டின் கட்டாங்கா மாகாணம் சிங்கோலோப்வே சுரங்கத்தில் ரூதர்போர்ட்டின் கனிமத்துடன் வையார்டைட்டு காணப்படுகிறது[3]

வையார்டைட்டு
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுCaU5+
(UO
2
)
2
(CO
3
)O
4
(OH)
•7H2O
இனங்காணல்
நிறம்கருப்பு, ஊதாகருப்பு (புதியது); மஞ்சள் பழுப்பு, பசுமைப்பழுப்பு (திறந்தவெளி)
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மிளிர்வுகண்ணாடி, துணை உலோகம், மந்தம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும், ஒளிபுகாது
மேற்கோள்கள்[1][2]

வையார்டைட்டு கனிமத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் யுரேனியத்தின் ஐந்திணைதிற கனிமத்திற்கு ஆதாரமாக உள்ளன. பிற யுரேனியம் கனிமங்கள் போல இதுவும் ஒரு கதிரியக்கத்தன்மை கொண்ட கனிமமாகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வையார்டைட்டு கனிமத்தை Wya[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat
  2. Mineralienatlas
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வையார்டைட்டு&oldid=4092672" இலிருந்து மீள்விக்கப்பட்டது