வைரவன்பட்டி
வைரவன்பட்டி (Vairavapatti) இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் தமிழ் மொழியில் வைரவன் என்று அழைக்கப்படும் காலபைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலிலிருந்து இந்த பெயரைப் பெற்றது. இது புகழ்பெற்ற புனித யாத்திரை மையமான பிள்ளையார்பட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. வைரவன் கோயில் தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தால் போற்றப்படும் மரியாதைக்குரிய 9 கோயில்களில் ஒன்றாகும்.[1] [2] இங்குத் தலைமை வகிக்கும் தெய்வம் வளரொளி நாதர் மற்றும் அவரது துணைவியார் வடிவுடையம்மாள். இங்கே அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னிதியில் காட்சிதருவது முக்கியமானது. எனவே தமிழில் வைரவன்-பட்டி என்று இந்த ஊர்ப் பெயர் பெற்றது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/en/new_en.php?id=327
- ↑ http://sgthampi.blogspot.co.uk/2006/05/vairavanpatti-temple.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.