வைரவன்பட்டி வைரவன் கோயில்
வைரவன்பட்டி வைரவன் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°07'43.4"N, 78°39'28.1"E (அதாவது, 10.128726°N, 78.657807°E) ஆகும்.
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக வைரவன் சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை அம்பாள் ஆவார். கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அளிஞ்சி ஆகியவை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைரவர் தீர்த்தம் உள்ளது. சம்பக சூர சஷ்டி, பிள்ளையார் நோம்பு உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
தொகுஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலின் தல விநாயகர் வளரொளி விநாயகர் ஆவார். கருவறை கோஷ்டத்தில் ராமர் ஆஞ்சநேயரை வணங்கிய நிலையில் உள்ளார். இலங்கைக்குச் சென்ற ஆஞ்சநேயர் சீதை இருக்கும் செய்தியை ராமருக்கு அறிவித்ததற்கு நன்றி கூறும் விதமாக ராமர் இவ்வாறு உள்ளதாகக் கூறுவர். இறைவி சன்னதிக்கு முன் பைரவர் தனி சன்னதியில் உள்ளர். தட்சிணாமூர்த்தி ஏழிசைத் தூண் மண்டபத்தில் உள்ளார். நந்தி தனி மண்டபத்தில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகுபடத்தொகுப்பு
தொகு-
கோயில் குளம்
-
ராஜ கோபுரம்
-
முன் மண்டபம்