வைஷ்ணவி மஹந்த்

வைஷ்ணவி மஹந்த் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஷக்திமான் என்ற தொடரில் கீதா விஷ்வாஸாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1] பிறகு பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பம்பாய் கா பஹு, லாட்லா, புல்புல் போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் என்ற இந்தி தொடரில் நடித்து வருகிறார்.

வைஷ்ணவி மஹந்த்
Vaishnavi Mahant.jpg
பிறப்பு9 செப்டம்பர் 1974 (1974-09-09) (அகவை 46)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது
அறியப்படுவதுசக்திமான், மிலே ஜப் ஹம் தும், ஸப்னே சுஹானோ லடக்பன் கே

சின்னத்திரை வாழ்க்கைதொகு

வைஷ்ணவி மஹந்த் 1988ஆம் ஆண்டு வீரானா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் நடிப்பு தொழிலில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார். பிறகு ஒருசில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1998ஆம் ஆண்டு ஷக்திமான் என்ற தொடரில் முதன்மை நடிகையாக நடித்ததன் மூலம் அவர் சின்னத்திரை உலகில் நுழைந்தார். அத்தொடரில் இவர் நடித்த கீதா விஷ்வாஸ் என்ற நிருபர் கதாபாத்திரம் பெரிதும் போற்றப்பட்டது. இவ்வாறு அவர் தான் நடித்த முதல் தொடரிலேயே புகழ் பெற்று விட்டார்.

பிறகு பல இந்தி தொடர்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவற்றுள் அவர் நடித்த பாஸ்கர் பாரதி, மிலே ஜப் ஹம், ஸப்னே சுஹானே லடக்பன் கே மற்றும் தஷன்-யே-இஷ்க் போன்ற தொடர்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். தற்போது அவர் தில் ஸே தில் தக் என்ற தொடரில் சித்தார்த் ஷுக்லாவின் அம்மாவாக நடித்து வருகிறார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்தொகு

ஆண்டு தொடர் விருது பகுப்பு முடிவு
2006 ஏக் லட்கி அஞ்சானி ஸி இந்தியன் டெல்லி விருதுகள் சிறந்த துணை நடிகை பரிந்துரை
2014 ஸப்னே சுஹானே லடக்பன் கே இந்தியன் டெல்லி விருதுகள் சிறந்த துணை நடிகை
நடுவர் தேர்வு
பரிந்துரை
2014 ஸப்னே சுஹானே லடக்பன் கே ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த தாய்-தந்தை
ஷக்தி சிங்குடன்
வெற்றி

[2]

2015 தஷன்-யே-இஷ்க் ஜீ ரிஷ்தே விருதுகள் சிறந்த தாய்-மகள்
ஜாஸ்மின் பஸினுடன்
வெற்றி

[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஷ்ணவி_மஹந்த்&oldid=2711649" இருந்து மீள்விக்கப்பட்டது