வை. செல்வராஜ்

வை. செல்வராசு (Selvaraj V) இந்தியப் பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த அரசியலாளர் ஆவர். [1] இவர் 2024 நாடாளுமன்றத்தின் 18ஆவது மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் பேட்டியிட்டு[1] [2] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுர்சித் சங்கர் ஜியைவிட 2,08,957 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.[3][4][5]

வை. செல்வராஜ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்மு. செல்வராசு
தொகுதிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக்குறிப்பு

தொகு

வை. செல்வராசு கீழநாலாநல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவ்வூர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சியில் அமைந்திருக்கிறது. இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும் பூண்டி புசுபம் கல்லூரியில் பயின்று கலை முதுவர், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.[1] [2]

அரசியலாளர்

தொகு

கல்லூரியில் பயிலும் பொழுதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாணவர் அமைப்பான அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்றியவர். 1980ஆம் ஆண்டில் அக்கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்தவர். அக்கட்சியில் மன்னார்குடி ஒன்றியச் செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.[1] [2], [6]

பதவி

தொகு

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்தவர். பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பணியாற்றியவர். [1] [2]

சான்றடைவு

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 இந்து தமிழ்திசை, 2024 03 19, பக்ல் 6 & 7
  2. 2.0 2.1 2.2 2.3 ‛மாணவர் சங்கம் டூ லோக்சபா வேட்பாளர்’’. நாகையில் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டி. யார் இவர்?; ஒன் இந்தியா 2024 03 18
  3. "Election Commission of India". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  4. "Nagapattinam Election Result 2024 Vs 2019". டைம்ஸ் நவ். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  5. "CPI’s V Selvaraj wins Nagapattinam in debut general election with overwhelming margin". The New Indian Express. 5 June 2024. https://www.newindianexpress.com/amp/story/states/tamil-nadu/2024/Jun/05/cpis-v-selvaraj-wins-nagapattinam-in-debut-general-election-with-overwhelming-margin. 
  6. திருப்பூரில் சுப்பராயன், நாகையில் வை.செல்வராஜ் போட்டி, தினமணி 2024 03 18
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._செல்வராஜ்&oldid=4002897" இலிருந்து மீள்விக்கப்பட்டது