வோலர் செயல்முறை
வோலர் செயல்முறை (Wöhler process) என்பது அலுமினியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் முதல் வழிமுறைப் பாதைகளில் ஒன்றாகும். இச்செயல்முறையில் நீரற்ற அலுமினியம் குளோரைடுடன் பொட்டாசியம் சேர்த்து குறைக்கப்படுகிறது. இதனால் அலுமினியத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது [1]
- AlCl3 + 3 K → Al + 3 KCl.
ஆல்-எரௌல்ட்டு செயல்முறை போன்ற திறம்பட்ட மின்னாற்பகுப்பு வழிவகைகளின் வருகைக்குப் பின்னர் வூலர் செயல்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய இரசாயன அடிப்படையிலான வழிகள் வழக்கொழிந்து போயின.
வரலாறு
தொகு1825 ஆம் ஆண்டில் ஆன்சு கிரிசுட்டியன் ஒயர்சிடெட்டு என்ற டச்சு வேதியியலாளர் ஒரு செயல்முறையின் வழியாக தூய்மையற்ற அலுமினியத்தை உருவாக்கினார். இச்செயல்முறையை 1827 ஆம் ஆண்டில் பிரடெரிக் வோலர் சீரிய முறையில் மாற்றியமைத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட அலுமினியத்துடன் 1845 ஆம் ஆண்டில் வோலர் அலுமினியத்தின் ஒப்படர்த்தியை நிறுவினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.