வௌவால் மீன்

வௌவால் மீன் எலும்பு மீன்களில் சில இனங்களாகும். இவை கடலில் வாழ்பவை.

அமைப்பு

தொகு

உடல் நீள சதுர வடிவினதாக, பக்கத்துக்குப் பக்கம் அழுந்தி இருக்கும். தலை சிறியது. வாய் முன்முனையில் இருக்கும். செதில்கள் சிறியவை. வழுவழுப்பாக இருக்கும். முதுகிலே ஒரே துடுப்பு நீளமாக அமைந்திருக்கும். வால் துடுப்பு ஆழமான இரண்டு பிரிவுகளாக இருக்கும்.

நிறம்

தொகு

இம்மீனின் பொதுவான நிறம் வெண்மையான சாம்பல் நிறம். சில இனங்கள் கருஞ்சாம்பல் நிறமானவை. வேலை வௌவால் மீனைத்தான் மக்கள் விரும்புவார்கள். வௌவாலில் சிறிய முட்கள் இருப்பதால் இது மிகவும் சுவையுடைய மீன்.

இம்மீன்கள் தமிழ்நாட்டின் கிழக்குக் கரையில் மார்ச் முதல் செப்டம்பர் வரையில் அகப்படும். இவை கூட்டங்களாக உலவும். வௌவால் மீன்கள் பாம்பஸ் (pampus), ஸ்ட்ராமட்டியஸ் (stromateus) , என்னும் சாதிகளைச் சேர்ந்தவை.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வௌவால்_மீன்&oldid=3532804" இலிருந்து மீள்விக்கப்பட்டது