ஷகிலா (பாலிவுட் நடிகை)

சகிலா (Shakila)(சனவரி 1, 1935–20 செப்டம்பர் 2017) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

சகிலா
Shakila
ஆர் பார் படத்தில் ஜானி வாக்கருடன் சகிலா (1954)
பிறப்பு(1935-01-01)1 சனவரி 1935
ஆப்கானித்தான்
இறப்பு20 செப்டம்பர் 2017(2017-09-20) (அகவை 82)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1949–1963
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆர் பார் (1954)
சி. ஐ. டி. (1956)
சைனா டவுண் (1962)
வாழ்க்கைத்
துணை
ஒய். எம். எலியாசு
(தி. 1963)
உறவினர்கள்ஜானி வாக்கர் (மைத்துனர்)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சகிலா 1935 சனவரி 1 இல் பிறந்தார். இவரது உடன் பிறந்தவர்கள் நூர்ஜஹான் என்ற நூர். சகிலா ஒய். எம். எலியாசினை திருமணம் செய்து கொண்டார். சகிலாவின் தங்கை, நூர் இந்தி பட உலகின் சிரிப்பு நடிகரான ஜானி வாக்கர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய மற்றொரு தங்கை நசிரீன்.[1] இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர்கள் வறுமை நிலையில் அத்தையின் பாதுகாப்பில் பம்பாயில் வசித்து வந்தனர். 1962-ல் ஜானி பார்பர் என்பவரைத் திருமணம் புரிந்து, இங்கிலாந்து சென்றார்.[2] எனினும் அவருடைய இவர்களது மணவாழ்க்கை சிறக்கவில்லை. இவர்களுக்கு மீனாசு என்ற பெண் குழந்தை பிறந்தது. 1991-ல் மகள் விபத்து ஒன்றில் இறந்தார்.

திரைவாழ்க்கை தொகு

சகிலா நடித்து வெளிவந்த முதல் படம் துன்யா (1949) ஆகும். தஸ்தான் (1950) திரைப்படத்தில் ராஜ் கபூர், சுரையா ஆகியோருடன் சகிலா சிறு வயது வீணாவாக நடிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1954-ல் வெளிவந்த குருதத்தின் திரைப்படமான ஆர் பார் (1954) படத்தில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். 1954-ல் சகிலா நடித்த ஒன்பது படங்கள் வெளிவந்தன. இவர் நடிப்பில் வெளிவந்த ஆர் பார் (1954), சி. ஐ. டி (1956), சைனா டவுன் (1962) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 50க்கும் அதிகமான படங்களில் நடித்து 1963-ல் திரை வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.[3]

மறைவு தொகு

சகிலா சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாதிருந்தார். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவரை மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின்பு ஜூஹூ பகுதியில் உள்ள ஆரோக்கிய நிதி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி 2017 செப்டம்பர் 20-ல் காலமானார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "The Hindu : Johnny Walker... signing off on a high". Thehinduretailplus.com. 2003-08-01. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-14.
  2. Great Gambler
  3. http://www.screenindia.com/old/sep24/film2.htm
  4. "Leke Pehla Pehla Pyar actor Shakila dead". Indian Express.
  5. http://m.dinamalar.com/detail.php?id=1860234
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷகிலா_(பாலிவுட்_நடிகை)&oldid=3717543" இலிருந்து மீள்விக்கப்பட்டது