ஷசி காந்த் ஷர்மா

ஷசி காந்த் ஷர்மா (Shashi Kant Sharma, शशिकांत शर्मा) 1976 ஆண்டு பீகார் பணியிடைப் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு இந்திய குடிமைப் பணியாளர். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்புத் துறைகளின்[1] செயலாரகப் பணியாற்றிய இவர் ஒரு முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார். 2013 மே 23 ல் வினோத் ராயை தொடர்ந்து இந்திய அரசின் 12 வது உயர் தணிக்கையாளராகப் பொறுப்பேற்றார். [2]

ஜூலை 2014 இல் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கைக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் முதல் செப்டம்பர் 24 ஆம் நாள் வரை ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கைக் குழுத் தலைவராகப் பணியாற்றியபோது ஐக்கிய நாடுகள் சபையில் தணிக்கை செய்த முதல் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்ற சிறப்பைப் பெற்றார். மீயுயர் தணிக்கை நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் அறிவுப்பகிர்வு மற்றும் அறிவுச்சேவைகள் குழுவின் தலைவர் பொறுப்பில் ஐக்கிய நாடுகள் புறத்தணிக்கையாளர் குழுவின் உறுப்பினாகவும் பண்யாற்றியுள்ளார.[3]

ஐக்கிய நாடுகள் சபையின் தணிக்கைக் குழுத் தலைவராக அவருடைய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF), ஐக்கிய நாடுகளின் கூட்டு ஊழியர் ஓய்வூதிய நிதியம் (UNJSPF), ஐக்கிய நாடுகள் சபையின் இழப்பீடு ஆணையம், பன்னாட்டு வாணிப மையம், ஐக்கிய நாடுகள் திட்டங்களுக்கான அலுவலகம் ஆகியவற்றிலும், மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் ஆறு திட்டங்களிலும் தணிக்கை செய்வதாகும். [4]

சான்றுகள்தொகு

  1. "Defence Secretary Shashi Kant Sharma to be new CAG". The Hindu (21 மே 2013). பார்த்த நாள் 12 ஆகத்து 2019.
  2. Jha, Jithesh (22 மே 2013). "Shashi Kant Sharma Appointed as the New Comptroller & Auditor General of India". jagranjosh. பார்த்த நாள் 12 ஆகத்து 2019.
  3. http://www.cag.gov.in/sites/default/files/press_release/Press_11.1.17.pdf
  4. "Shri Shashi Kant Sharma, C&AG of India takes over as Chairman of the UN Board of Auditors" (11 January 2017). மூல முகவரியிலிருந்து 2017-04-02 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷசி_காந்த்_ஷர்மா&oldid=2787140" இருந்து மீள்விக்கப்பட்டது