ஷமிம் அரா நிபா
ஷமிம் அரா நிபா ( Shamim Ara Nipa ) ஒரு வங்காளதேச நடனக் கலைஞரும், நடன இயக்குனரும் ஆவார். [1] நிருத்யாஞ்சல் என்ற நாட்டிய நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். [2] நடனத்தில் இவரது பங்களிப்பிற்காக 2017 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசால் எகுஷே பதக் வழங்கப்பட்டது [3]
ஷமிம் அரா நிபா | |
---|---|
எகுஷே பதக் ஷமிம் (பிப்ரவரி 2017) | |
தேசியம் | வங்காளதேசத்தவர் |
பணி | நடனக் கலைஞர், நடன இயக்குனர் |
விருதுகள் | எகுஷே பதக் |
தொழில்
தொகுநிபா தனது முதல் நடனப் பாடத்தை கிசோர்கஞ்ச் மாவட்டத்தின் கலைப் பள்ளியில் படித்தார். அங்கு இவர் நடன பயிற்றுனர்கள் ஜிஏ மன்னான் மற்றும் நிகுஞ்சா பிஹாரி பால் ஆகியோரிடம் பயின்றார். பின்னர் புல்புல் கலைப் பள்ளியில் பயிற்சி பெற்றார். மேலும், வட கொரிய நடன பயிற்சியாளரிடமும், சீனாவின் தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்திலும் பயிற்சி பெற்றார். [2] 2011 ஆம் ஆண்டு முதல் ஷிப்லி முகமதுவுடன் சேர்ந்து, வங்காளதேசத் தொலைக்காட்சியில் வாராந்திர நடன இதழான தரானா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். [2]
விருதுகள்
தொகுடாக்கா பிரிவில் சிறந்த நடனக் கலைஞருக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்ற நிபா, வங்காளதேச நாட்டுப்புற மன்றம், தேசிய இளைஞர் மன்றம் மற்றும் பிற நிறுவனங்களால் சிறந்த நடனக் கலைஞராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ "Shamim Ara Nipa" (in en). https://www.thedailystar.net/showbiz/through-the-eyes/shamim-ara-nipa-1608457.
- ↑ 2.0 2.1 2.2 "Shamim Ara Nipa : Director of Nrityanchal". பார்க்கப்பட்ட நாள் 15 February 2015.
- ↑ "17 named for Ekushey Padak 2017". http://www.thedailystar.net/country/17-named-ekushey-padak-2017-1360108.