ஸ்டார் ஃபேரி
ஸ்டார் ஃபெர்ரி அல்லது “ஸ்டார்” ஃபெர்ரி நிறுவனம் என்பது ஹாங் காங்கின் பயணிகள் ஃபெர்ரி அல்லது பயணப்படகுச் சேவை நடத்தும் நிறுவனமாகும். இதன் முக்கிய போக்குவரத்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு விக்டோரியா துறைமுகத்திலிருந்து ஹாங் காங் தீவிற்கும் கௌலுனுக்கும் இடையில் பயணத்தை மேற்கொள்வதாகும்.
இப்பயணப்படகு கௌலுன் பயணப்படகு நிறுவனம் என்று 1888 இல் பதிவு செய்யப்பட்டது. பிறகு 1898 இல் தற்போதைய பெயரை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு நாளும் 70,000 இம் பயணிகளையும் ஆண்டுக்கு இரண்டுக் கோடியே அறுபது லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பன்னிரெண்டு பயணப் படகு அனையத்திலிருந்து தற்போது இரண்டு வழியாக துறைமுகத்திலிருந்து செயல்படுகின்றது.
இரும்புப் பாதையும் சுரங்கப் பாதையும் துறைமுகத்தை கடந்தாலும் ஸ்டார் ஃபெர்ரி, துறைமுகத்தை கடப்பதற்கு தொடர்ந்து குறைந்த கட்டணத்திலே செயல்படுகின்றது. இந்நிறுவனத்தின் முக்கிய வழி தலமையகத்திற்கும் சிம் ஷா சுய்விற்கும் இடையில் செல்வதாகும். இந்நிறுவனம் பத்து முன்னணி நிறுவனத்தின் மகிழ்ச்சியூட்டும் பயணப்படகுச் சவாரியில்’’ முதன்மையாக இருக்கின்றது என்று அமெரிக்க சமூகத்தின் சுற்றுலா கட்டுரையாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 2009 இல் தேர்வு செய்தனர்.
வரலாறு
தொகுஹாங் காங் போக்குவரத்து
தொகுநீராவி பயணப் படகு இல்லாத முன்பு, மக்கள் துறைமுகத்தை கடப்பதற்கு துடுப்பு படகினை பயன்படுத்தினர். 1870 ஆம் ஆண்டு திரு: கிரந் ஸ்மித் என்பவர் இங்கிலாந்திலிருந்து இரு சக்கரப் படகை (படகுக்கு இருபக்கம் வெளிப்புறத்தில் இணைக்கப் பட்டிருக்கும் சக்கரம்) தருவித்தார். இவர் அட்டவனையின்றி படகுப் பயணத்தை தொடங்கினார்.
ஜுலை 1873 ஆம் ஆண்டு ஹாங் காங்கிற்கும் கௌலூனிற்கும் இடையே நீராவி பயணப் படகு வெள்ளோட்ட முயற்சினை மேற்கொண்டிருந்தார். இம்முயற்சினை கெந்தோன் பிரித்தானிய சட்டத்துறை வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தப்பட்டது.
1888 ஆம் ஆண்டு பார்சி வணிகர் திரு: டோராப்ஜி நாவ்ரோஜி மிதைவாலா அவர்களால் “கௌலுன் ஃபெர்ரி கம்பெனி” நிறுவப்பட்டது. திரு: நவ்ரோஜி அவர்கள், திரு: ஸ்மித்தின் படகையும் பிறகு தேவைப்பட்ட நீராவி கொள் கலன் கப்பலான மோனிங் ஸ்டார் மற்றும் ஈவ்னிங் ஸ்டார் என்ற இரு கப்பலை திரு: பியுக்சூ என்பவரிடம் வாங்கினார்.
1860 ஆம் ஆண்டு கௌலூனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த பிறகு 1870 ஆம் ஆண்டு பதிவு செய்ததை பொதுமக்களுக்கு முறையாக சேவையில் ஈடுபடுத்தலாம் என்று எண்ணினார்.
அவரின் ஓய்வு காலமான 1898 ஆம் ஆண்டு திரு: நவ்ரோஜி அவர்கள் தன் நிறுவனத்தை ஹங் காங், கவ்லுன் வார்ஃப் மற்றும் கொடான் கம்பெனி லிமிடெட் உரிமையாளர்களான திரு: ஜார்டின், மதிசன் & கம். மற்றும் சர் பால் சாட்டர் அவர்களிடம் விற்றார்.
மேற்கில் கட்டி முடிக்கப்பட்ட படகுத் துறை முனையம், சலிஸ்பரி சாலையில் முடிக்கப்பட்டு 1906 ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டது. ஆனால் இயற்கை சீற்றத்தால் செப்டம்பர் மாதம் 1906 ஆம் ஆண்டு ஆழி பேரலையால் அழிந்தது.
1950 ஆம் ஆண்டு தொடக்கத்தில் விக்டோரியா துறைமுகத்தில் இரு பக்கமும் இரட்டை படகுத் துறை முனையம் கட்டுமானம் தொடங்கியது. இதன் வடிவமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் 55 ந்து மில்லியன் பயணிகளை கையாள்வதற்கு வகைச்செய்கிறது.
1957 ஆம் ஆண்டு முழுமைப் பெற்ற இக்கட்டடம் தீவின் அருகில் எடின்பர்க்குடன் சந்திக்கும் இடத்தில் படகுத் துறை முனையம் கட்டப் பட்டது. நூற்றாண்டு திருபத்தில் இரு நாணயங்களான ஹங் காங் நாணயத்தையும் கெந்தோன் நாணயத்தையும் ஹங் காங் சட்டப் பூர்வமாக ஏற்றது.
1912 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் நாணய மதிப்பு வீழ்ச்சியினைத் தொடர்ந்து வற்புறுத்தல் வழியாக ஸ்டார் ஃப்பெர்ரி சச்சரவை உண்டாக்கியது. சாலைத் தண்டவாளத் தொடர்வண்டி போக்குவரத்துடன் சேர்ந்து ஹங் காங் நாணயத்தில் மட்டும் இக்கட்டணம் செலுத்திருக்க வேண்டும் என்றது. மேலும் கெந்தோன் நாணயம் நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
இரட்டையர் முற்றுரிமையில் 1924 ஆம் ஆண்டு யௌமதி பயணப் படகு கவ்லுனுக்கு பயணத்தை மேற்கொண்டது.1933 ஆம் ஆண்டு எலக்ரிக் ஸ்டார் பயணப் படகு கட்டுமானத்தில் ஸ்டார் ஃபெர்ரி வரலாறு படைத்தது. இது முதல் டிசெல் மின்சார பயணிகள் படகு வகையில் இதுவும் அடங்கும்.
1941 ஆம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனம் ஆறு கொள்கலன் கப்பலைக் கொண்டிருந்தது. ஜப்பானிய இராணுவ பயன்பாட்டிற்கு ஸ்டார் ஃபெர்ரி படகை பயன்படுத்தும் வேளையில் ஹங் காங்கில் ஜப்பானியர் பணியின் போது போட்டியிடும் யௌமதி கப்பலைத் தொடர அனுமதித்தது.
கோல்டன் ஸ்டார் மற்றும் மெரெடியன் ஸ்டார் ஆகிய இருகப்பல்களில் போர் கைதிகளை சம் சுய் பொவிலிருந்து (sham shui po) கை டக்கிற்கு (kai tak) ஏற்றிச்செல்ல பயன் பட்டது.
அமெரிக்க போர் விமானத்தால் 1943 இல் கெந்தோன் ஆற்றில் கோல்டன் ஸ்டார் கப்பலை குண்டு வீச்சால் மூழ்கடிக்கப் பட்டதுடன் இலக்ட்ரிக் ஸ்டார் கப்பலையும் துறைமுகத்தில் மூழ்கடித்தது. போருக்கு பிறகு, கப்பல் அனைத்தும் பழைய நிலைக்கு சேவையில் திரும்பியது.
1972 இல் துறைமுகத்தை கடக்கும் சுரங்கப் பாதையை திறக்கும் வரையில், பொது போக்கு வரத்தின் முக்கிய வழியான ஹங் காங் தீவிற்கும் கௌலுன் பகுதிக்கும் இடையில் ஸ்டார் ஃபெர்ரி கப்பல் போக்கு வரத்தை நிலைநிறுத்தியது.
ஸ்டார் ஃபெர்ரி பயணப் படகு அரசாங்கமிடமிருந்து தனி உரிமம் பெற்று இயங்குகிறது.இதன் நூற்றாண்டு காலத்தை மார்ச் மாதம் 1998 இல் இறுதியாக புதுப்பிக்கப் பட்டது.