ஸ்டோக் காங்ரி
ஸ்டோக் காங்ரி (Stok Kangri) வட இந்தியாவில் ஸ்டோக் பகுதியில் இருக்கும் உயரமான மலை ஆகும். இது இமயமலையின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. அதிக உயரம் இருந்தபோதிலும், ஸ்டோக் காங்ரி ஒரு பிரபலமான மலையேற்ற சிகரமாகும். மேலும் உயரமான மலையேறுதலுக்கான ஆரம்ப தொழில்நுட்பமற்ற பயணமாக இது பெரும்பாலும் ஏறப்படுகிறது. இருப்பினும், ஸ்டோக் காங்க்ரியின் சிரமம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது, மேலும் ஏறும் முன்னும் பின்னும் பழக வேண்டிய அவசியம் ஸ்டோக் காங்கிரியை நீடித்த சவாலாக ஆக்குகிறது.[1][2]
ஜூலை மாதத்தின் கடைசியில் ஆகஸ்டு மாதத்திலும் இதன் உச்சியில் பனி இல்லாமல் இருக்கும். இச்சிகரத்தின் உச்சியில் ஏற மிகவும் எளிதான மற்றும் பிரபலமான வழி ஸ்டோக் பள்ளத்தாக்கு வழி ஆகும். ஆகஸ்டு மாதத்தில் ஸ்டோக் கிராமத்தில் மேய்ச்சல் நிலங்களாக இருக்கும். பிக்டன்(Bicton) கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு 2002 மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் இதன் உச்சியை அடைந்ததே குளிர்காலத்தில் சிகர உச்சியை அடைந்த அதிகாரபூர்வமான சாதனை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Majumdar, Arjun. "Why the Stok Kangri trek in Ladakh is meant for the experienced trekker". indiahikes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.
- ↑ Allen, Nick. "Stok Kangri: A Different Kind of Success". www.masteringmountains.org. Archived from the original on 2016-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-10-28.