ஸ்பாஞ்ஜ்பாப் ஸ்கொய்ர்பேண்ட்ஸ்

சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு (SpongeBob SquarePants) என்பது ஒரு கடல் உயிரியல் நிபுணர் (Marine Biologist) தயாரித்த ஒரு அமெரிக்கன் அசைவூட்டம் பெற்ற சித்திரத் தொலைக்காட்சித் தொடர் (Animated Television Series) ஆகும்.அந்த நிபுணர் நிக்கலோடியோன் (A cable TV channel network for children in USA) என்ற தொலைக்காட்சி பிணையத்தைச் (Network) சேர்ந்த சுடீபன் இல்லன்பர்க்கு (Stephen Hillenberg) ஆவார். இந்த தொடர், தலைப்புப்பாத்திரம் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிகினி பாட்டம் என்கிற நீருக்கடியிலுள்ள நகரத்தில் மேற்கொண்ட சாகசச்செயல்களையும் முயற்சிகளையும் காலக்கிரமத்தில் வரிசைப்படுத்தி விவரிக்கிறது. இந்த தொடரின் புகழ் மீடியா ஒப்போலையுரிமை (Media Franchise) யைப் பெற்றது மட்டுமில்லாமல் நிக்கலோடியோன் சானலில் ஒளிபரப்பப்பட்ட தொடர்களிலேயே மீப்பெரு தரவரிசை எண்ணைப் (Highest Rank) பெற்ற தொடர் என்றும், அதிகம் வினியோகம் செய்யப்பட்ட எம் டி வி பிணைய உடைமை (MTV Network Property) என்றும் பெயர் பெற்றது. 2017-ல் ஊடக ஒப்போலையுரிமை வணிக விற்பனை மூலம் $13பில்லியன் வருவாயை உருவாக்கியது.[2]

சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு
SBSP logo.png
வகைஅசைவூட்டம் பெற்ற சித்திரத்தில் சூழல் நகைச்சுவை[1]
உருவாக்கம்சுடீபன் இல்லன்பர்க்கு
முன்னேற்றம்
படைப்பு இயக்குனர்
குரல்நடிப்பு
கதைசொல்லிஇடாம் கென்னி (பற்பல அத்தியாயங்கள்)
முகப்பு இசைஇடரக் இடிரைமோன்
மார்க்கு ஆரிசன் ஆரிசன்
சுடீபன் இல்லன்பர்கு
பிளைசு சுமித்து
முகப்பிசை"சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு தீம்", பாட்ரிக்கு பின்னி நிகழ்த்தியது
முற்றிசை"சியரெ பாப்பு எசுபோன்சா", சிடீவ் பெல்பெர் எழுதி தி புளூ அவாயன்சு நிகழ்த்தினர்.
பிண்ணனி இசைசிடீவ் பெல்பெர்
நிகொலசு கார்
சகே குய்டன்
செரமி வேக்பீல்டு
பிராட் கரோB (1999–2002)
தி புளூ அவாயன்சு (1999–2002)
எபன் சிலெட்டர் (2000–தற்போது)
பாரி அந்தோணி (2006–15)
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்11
அத்தியாயங்கள்232 (list of episodes)
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • சுடீபன் இல்லன்பர்க்
  • பால் இடிப்பிட்டு (2008–17)
  • துணை செய்லாக்கத் தயாரிப்பாளர்கள்
  • பால் இடிப்பிட்டு (2006–08)
தயாரிப்பாளர்கள்
  • இடோன்னா காசுடிரிகோன் (1999–2002)
  • எலன் கஃபாடிக்கு (2002–04)
  • அன்னி மிச்சாடு (2001)
  • இடினா புடெய்ன் (2005–10)
  • சென்னி மோனிகா ஆம்மோன்டு (2010–தற்போது)
  • மேர்பார்வை தயாரிப்பாளர்கள்:
  • இடிரக் இடைமோன் (2002–04)
  • பால் இடிப்பிட்டு (2005–15)
  • மார்க்கு செக்கரலி (2015–தற்போது)
  • வின்சன்ட் வாலர் (2015–தற்போது)
ஓட்டம்11 மணித்துளிகள் (வழக்கமான அத்தியாயங்கள் மட்டும்)
22 மணித்துளிகள் (சிறப்பு அத்தியாயங்கள் மட்டும்)
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்வயாகாம் மீடியா நெட்வர்க்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநிக்கலோடியோன்
படவடிவம்
ஒலிவடிவம்
ஒளிபரப்பான காலம்மே 1, 1999 (1999-05-01) –
தற்போது (தற்போது)
Chronology
தொடர்புடைய தொடர்கள்இரோக்கோவின் மாடர்ன் இலைப்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் ஏற்பட உதவிய பல கருத்துக்கள் இல்லன்பர்கு 1989-ல் உருவாக்கிய தி இன்டெர்டைட்ல் சோன் என்கிற முன்பு எப்போதும் பிரசுரிக்கப்படாத கல்விசார் நகைச்சுவை நூலிலிருந்து ஆரம்பித்தது.[3] இரோக்கோவின் நவீன வாழ்க்கை (Rocko's Modern Life) இரத்து செய்யப்பட்டபின் அவருடன் பணி செய்த இடாம் கென்னி (Tom Kenny) என்பவரை முக்கிய கதா பாத்திரத்துக்கு ஒலி கொடுப்பதற்காக அணுகினார். மேலும் அவர் 1996-ல் சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு -ஐ தொலைக்காட்சித்தொடராக விரிவாக்க ஆரம்பித்தார். சுபான்சுபாப்பு ஆரம்பத்தில் சுபான்சு பாய் என்றும் மேலும் அந்தத் தொடர் சுபான்சுபாய் அகாய் என்றும் பெயரிடுவதாக இருந்தது. ஆனால் இரண்டும் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்டிருந்ததால் மாற்றப்பட்டது

மே 1, 1999 அன்று நிக்கலோடியோன் அந்த தொடரின் முன்னோட்டத்தை ஐக்கிய அமெரிக்காவில் 1999 குழந்தைகள்- வாய்ப்பு விருது (1999 Kids' Choice Awards) என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பிற்குப் பிறகு நடத்தினார். அந்தத் தொடர் அதிகார பூர்வமாக சூலை 17, 1999 அன்று முதல் ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது.அது உலகெங்கிலும் பாராட்டைப்பெற்றது மட்டுமில்லாமல் இரண்டாவது சீசனிலும் முதல் ஆட்டத்திலிருந்து பெரும் புகழ் அடைந்தது. தி சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு திரைப்படம், என்ற பெயரில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ந்வம்பர் 19, 2004, அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சி பிப்ரவரி 6, 2015 அன்று வெளியிடப்பட்டது. 2017-ல், அந்தத்தொடர் 11-வது சீசனை ஒளிபரப்பத்தொடங்கிப் பின் 12வது சீசனுக்காகவும் புதுப்பிக்கப்பட்டது. இது கடல் உயிரினங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அந்தத் தொடர் ஆறு ஆனி விருதுகளையும்,எட்டு கோல்டன் இரீல் விருதுகளையும்,நான்கு எம்மி விருதுகளையும், 12 நிக்கலோடியோன் குழந்தைகள் விருப்பம் விருதுஐயும் மேலும் இரண்டு பாப்டா குழந்தைகள் விருது ஐயும் சேர்த்து பற்பல விருதுகளைப் பெற்றது. அந்தத் தொடர் பரவலாகப் புகழ் பெற்றும் ஊகத்தை மையமாக வைத்து சுபான்சுபாபு வின் பால் நிலைப்பாடு தொடர்பான நோக்கம் பற்றி கிளப்பபட்டதையும் சேர்த்து பல பொது சர்ச்சைகளில் சிக்கியது. 2011-ல் கார்ட்டூனின் தலைப்புப்பாத்திரத்துக்கு புதிதாக விளக்கப்பட்ட காளான் இனங்களான சுபான்சிபார்ம சுகுயர்பான்ட்சீ -ன் பெயரிடப்பட்டது. 2017-ல் இந்த தொடரை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்ட பிராட் வே ம்யூசிகல் பெரிய பாராட்டு விமரிசனத்தைப் பெற்றது.[4]

முதற்கோள்தொகு

கதா பாத்திரம்தொகு

இந்த தொடர், அதன் தலைப்புக் கதாபாத்திரம் மற்றும் அவனுடைய நண்பர்களைச் சுற்றி அமைந்துள்ளது. சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு ஒரு சுறுசுறுப்பான மற்றும் தெருள் நோக்குடையகடல் பஞ்சு ஆகும். அவன் பார்ப்பதற்கு செவ்வக வடிவத்தில் அடுப்பங்கரை பஞ்சு போன்ற தோற்றமுள்ளவன். அவன் அன்னாசிப்பழத்தினுள் வெகு ஆழத்தில் காரி என்ற பெயருடன் (ஒரு பூனையைப் போல மியா மியா என்று கத்தக்கூடிய) தன்னுடைய செல்ல நத்தையுடன் வாழ்கிறான். அவன் குழந்தையைப் போன்றவனாய், வாழ்வில் ஆர்வமுள்ளவனும் ஆனபடியால் - கிரசுடி கிராபு என்ற ஒரு துரித உணவகத்தில் பொரிக்கும் அடுநனாக வேலைக்கு சேர்ந்தான். சுபான்ச்பாபின் பிடித்த பொழுது போக்கு செல்லி பிசிங்கு (அதாவது வண்ணத்துப் பூச்சியை பிடிப்பது போல் , இழுது மீனை பிடிப்பது மற்றும் வழலை நுரையை விரிவான வடிவங்களில் குமிழிகளை ஊதுவது ஆகும்.

சுபாஞ்ச்பாபு வின் வீட்டிலிருந்து இரண்டு வீட்டிற்கப்பால் அவனுடைய சிறந்த நண்பன் மந்த மதி படைத்த ஆனால் நட்பு மிகுந்த இளஞ்சிவப்பு பாட்ரிக்கு சுடார் என்ற நட்சத்திர மீன் உள்ளான். எப்போதும் பாறைக்கடியில் இருப்பான். அவனுக்கு மனோரீதியாக குறைகள் இருப்பினும் அவன் தன்னை ஒர் புத்திசாலியாகப் பார்க்கிறான்.[5] சுபாஞ்ச்பாபு வின் அடுத்த வீட்டில் அவனுடன் கிரசுடி கிராபில் வேலை செய்யும் சுகுய்வார்டு இடென்டகிள்சு என்னும் திமிர் பிடித்த மோசமான கோபிக்கும் மன நிலையில் ஆக்டபசு ஒருவன் உள்ளான். அவன் ஈசுடர் ஐலண்டு மொவையில் வசிக்கிறான். அவன் கிளாரினட் வாசிப்பதில், தன்னைப் படம் வரைவதில் மகிழ்கிறான். ஆனால் காசாளராக வேலை செய்வதை வெறுக்கிறான். குழந்தைத்தனமாக இருப்பதால் சுபாஞ்ச்பாபுவுக்கும் பாட்ரிக்குக்கும் இடையில் வசிப்பதைப் பற்றி புலம்புகிறான். கிரசுடி கிராபின் உரிமையாளன் கஞ்சனான திரு கிராப்சு என்ற பெயர் கொண்ட செந்நண்டு. அவன் தன்னை ஒரு மாலுமியாக நினைப்பதோடு தன் உணவகத்தை ஒரு கொள்ளைக்காரக் கப்பலைப் போல நடத்தி வருகிறான். ஒற்றைப் பெற்றோரான திரு கிராப்சு வுக்கு பேர்ல் என்கிற ஒரு விந்து திமிங்கிலம் உண்டு. அவளுக்கு தன் செல்வத்தை கொடுக்க வேன்டும் என்று அவர் விரும்பினார். பேர்லுக்கு தன் தந்தையின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை. அவளுக்கு நேரத்தை செலவிடுவதற்கு பாப்பு இசை கேட்பதையும் அல்லது உள்ளூர் மாலில் வேலை செய்வதையும் தான் விரும்புகிறாள்.[6] சுபாஞ்ச்பாபு வின் இன்னொரு நண்பன் டெக்சாசைச் சேர்ந்த பரபரப்பு தேடும் சான்டி சீக்சு என்ற அணில் , நீருக்கடியில் மூச்சு விடுவதற்காக வேண்டி , காற்று நிரப்பிய நீர் மூழ்கும் உடையை அணிகிறாள்.[7] அவள் ஒரு ஓக் மரத்தில் காற்று புகாத சீல் வைக்கப்பட்ட கண்ணாடி குவிமாடத்துக்குள் வசித்து வருகிறாள். அவள் ஒரு கராத்தே வல்லுநர் மேலும் அவள் ஒரு விஞ்ஞானி ஆவாள்.

கிரசுடி கிராபு உள்ள அந்த தெருவுக்கு குறுக்கே சம்-பக்கட்டு [8] என்கிற வியாபாரம் ஆகாத ஒரு போட்டி உணவகம் இருக்கிறது. அதனை பிளாங்க்டன் என்ற ஒரு சிறிய பச்சை நிற கோப்பாடும்[9] , காரன் என்று அழைக்கப்படுகிற பேசும் மீக்கணினி சைடுகிக்கும் நடத்துகின்றனர். கிரசுடி கிராபு உணவகத்தின் வியாபாரத்தைக் கெடுக்கவும், தன் கை ஓங்கவும், கிரசுடி கிராபை வியாபாரம் நடத்த முடியாமல் துரத்திவிடவும்[10], பிரபலமான கிராப்பி பாட்டி என்கிற திருவாளர் கிராபின் என்னும் பர்கெர் உணவைத் தயாரிக்கும் முறையைத் திருடுவதற்காக விடாமல் முயற்சி செய்கிறான். பேசும் மீக்கணினியான காரன் சூத்திரத்தை திருட அவனுக்கு தீய பல திட்டங்களை வகுத்துத் தந்தாலும் அவர்கள் முயற்சிகள் வெற்றி அடையாமலும் அவர்கள் உணவகத்தில் ஒரு வாடிக்கையாளரும் வராமலும் வெறிச்சோடிக்கிடந்தது[11]. கிரசுடி கிராபில் வேலை செய்யாதபோது , சுபாஞ்ச்பாபு, பிறரை அதிகம் நம்பாத ஆனால் மிக்க பொறுமையுள்ள திருமதி பப்பு என்ற ஒரு வகை மீனிடம், படகு ஓட்டும் பாடங்கள் படிக்கிறான். சுபாஞ்சுபாபு திருமதி பப்பின் மிக அருமையான சோர்வடையாத பாடத்தில் கேட்கும் ஒவ்வொரு வாய்வழிக்கேள்விக்கும் விடை தெரிந்த மாணவன். ஆனால், உண்மையான படகு ஒட்டும் போது மட்டும் கவலை அடைவதும், மோதி விபத்துக்குள்ளாவதுமாக இருக்கிறான்[12]. அப்படி ஒரு மோதலை சமாளித்த திருமதி பப்பு , இன்னொரு மோதலின் போது அச்சமடைந்து வெடித்து பந்தாகிறாள்[13].

காட்சியின் சிறப்பு அத்தியாயங்கள், பாட்சி என்ற நேரடியாக செயல் படும் ஒரு திருடன் மற்றும் பொட்டி என்ற அவனது செல்லக்கிளியால் தொகுக்கப்பட்டது. அவனது பகுதிகள் அசைவூட்டப்பட்ட சித்திரமாக இரட்டைக் கதைகளாக வழங்கப்பட்டது[14]. பாட்சி கற்பனை சுபாஞ்ச்பாபு கிளப்புக்கு தலைவராக சித்தரிக்கப்பட்டார். அவனுடைய மிகப்பெரிய அவா தானே சுபாஞ்ச்பாபுவை சந்திப்பது ஆகும். அவன் காட்சியை நடத்தும்போது அவனது ஆர்வத்தை வேடிக்கை செய்ய பொட்டி விரும்பி , காட்சி நடத்தும் போது அவனுக்கு தொந்தரவு செய்கிறது. பிரஞ்சு நரேடர் என்று அழைக்கப்படும் முன்பறியாத உருவம் ஒன்று அத்தியாயங்களை அறிமுகம் செய்து ஏதோ கடலைப்பற்றிய ஆவணப்படம்போல இடையில் வருபவர்ளைப்பற்றிக் கதை சொல்கிறது. அவனுடைய பங்கு தனித்தன்மையுடன் பேசும் விதம் சக்யுசு கவிசுடவு என்ற கடல் ஆய்வு நிபுணர் போன்றுள்ளது.

இதர கதா பாத்திரங்கள்தொடர் முழுவதும் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றனர். அவர்கள் சுபாஞ்ச்பாபுவும் பாட்ரிக்கும் வழிபாடு செய்யும் கூ இலாகூனைச் சேர்ந்த தசைப்பிடிப்புள்ள உயிர்க் காவலன் லார்ரி என்கிற இரால் ; சுபெக்டர் என்கிற ஒரு கொள்ளைக்காரன் பறக்கும் இடச்சுமனிதன ஓய்வு பெற்ற மீநாயகன் மெர்மைடு மனிதன் , பார்னகிள் பையன் ஆவர்.

உசாத்துணைதொகு

  1. எரிக்சன், அல். "சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு [அனிமேடடு தொலைக்காட்சித்தொடர்]". இரோவி கார்ப்பரேசன். மார்ச்சு 17, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Deb, Sopan (November 27, 2017). "With a Singing SpongeBob, Nickelodeon Aims for a Broadway Splash". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/11/22/theater/spongebob-squarepants-the-broadway-musical-nickelodeon.html. பார்த்த நாள்: November 27, 2017. 
  3. "Casetext". அக்டோபர் 11, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Gold, Michael (May 2, 2018). "Before the Tonys, SpongeBob Seized the Culture With Memes". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/05/02/arts/spongebob-tony-nominations.html. பார்த்த நாள்: May 3, 2018. 
  5. "Squidtastic Voyage". Writers: Luke Brookshier, Tom King, Dani Michaeli. SpongeBob SquarePants. Nickelodeon. October 6, 2006. No. 75a, season 4.
  6. "SpongeBob SquarePants at NickSplat". Nickelodeon Asia. Viacom International. August 12, 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  7. "SpongeBob SquarePants: Meet the Gang!". Nickelodeon Australia. Viacom International. March 10, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  8. "Komputer Overload". Writers: Aaron Springer, Richard Pursel. SpongeBob SquarePants. Nickelodeon. March 19, 2009. No. 118b, season 6.
  9. Wilson, Amy (February 12, 2002). "Stephen Hillenburg created the undersea world of SpongeBob". Orange County Register. Archived from the original on ஜூன் 10, 2014. https://web.archive.org/web/20140610060614/http://www.highbeam.com/doc/1G1-82792771.html. 
  10. "Krusty Krab Training Video". Writers: Aaron Springer, C. H. Greenblatt, Kent Osborne. SpongeBob SquarePants. Nickelodeon. May 10, 2002. No. 50b, season 3.
  11. "Characters of SpongeBob SquarePants". Nickelodeon New Zealand. Viacom International. October 10, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  12. Sichtermann, Barbara (December 4, 2008). "SpongeBob: Das Kind im Schwamme". Der Tagesspiegel (Dieter von Holtzbrinck). http://www.tagesspiegel.de/medien/spongebob-das-kind-im-schwamme/1209130.html. 
  13. "Mrs. Puff at Nickelodeon Universe". Mall of America. Triple Five Group. June 6, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  14. Bianco, Robert (March 21, 2003). "Critic's corner". USA Today: p. 12E. 

ஆதார நூல் பட்டியல்தொகு

வெளி இணைப்புகள்தொகு