மடல் பூங்கொத்துப் பாளை
தாவரவியலில் மடல் பூங்கொத்துப் பாளை (spadix) (/ˈspeɪdɪks/ SPAY-diks; பன்மை ஸ்பேடிசெஸ் /ˈspeɪdɪsiːz/ SPAY-dih-seez, /speɪˈdaɪsiːz/ spay-DY-seez என்பது ஒருவகை மஞ்சரியாகும். இதில் சிறிய மலர்கள்சதைப்பற்றுள்ள தண்டில் அமைகிறன.னைந்த மடல் பூங்கோத்துப் பாளை அரேசியே, ஆர்ம்களிலும் ஆராயிடுகளிலும் அமைகின்றன.னைது இலைபோன்ற வளைந்த பூவடிச் செதில்களாலான பாளையால் சூழப்பட்டுள்ளது. எடுதுகாட்டாக, நன்கு அறிந்த அந்தூரியம் இன "மலர்" சார்ந்த பெரிய வன்ணப் பாளையால் சூழ்ந்த மடல் பூங்கொத்தைக் கூறலாம்.[1]


இந்தவகை ம்ஞ்சரியில் மஞ்சரிக் காம்பு தடிப்பாக நீண்டுச் சதைப்பற்றோடு சிறிய வாளரம்ப ஒருபாலி மலர்களால் ஒன்று அல்லத் இரண்டு பச்சை அல்லது வண்ணப் பூவடிச் செதில் பாளையால் மூடப்படுகின்றன.மடல் பூங்கொத்து மஞ்சரி கொலோக்கேசியா, அரேசியா சோளம், அரேக்கேசியே(கமுகுவகைத்) தாவரங்களில் அமைகிறது(கமுகுவகையில் கூட்டு மடல் பூங்கோத்துப் பாளைகள் அமைகின்றன).
ஒருபாலித் தாவரமான ஆராயிடுகள் தனி ஆண், பெண் மலர்களை ஒரே மடல் பூங்கொத்துப் பாளையில் கொண்டுள்ளன. இந்நிலையில் பெண்பூக்கள் கீழே சூல் முடியுடனும் ஆண்பூக்கள் மேலே பொலனுடனும் அமைகின்றன. சூல்முடிகள் போலன் விடுவிக்கப்படும்போது ஏற்பதில்லை. இது தன்கருவுறலைத் தவிர்க்கிறது.
கூட்டு மடல் பூங்கொத்து பளை மஞ்சரியில் அச்சு கிளைவிட்டுப் பிரிகிறது. வழக்கமாக முழு மஞ்சரியும் விறைப்பான படகுவடிவ உறைகூடுவழி தென்னையைப் போல மூடுகுறது.
காட்சிமேடை தொகு
-
களிற்று மடலி அல்லது மாந்தக்குரங்குமலர் (Xanthosoma sagittifolium) பச்சை, வெளிர்சிவப்பு, பழுப்புக்குழைவை நிறப் பாளைசூழ் வெண்மடல் பூங்கொத்து
-
அந்தூரியம் செர்செரியானம் பாளை மஞ்சரியும் மடல் பூங்கொத்தும்
-
Spathiphyllum floribundum மடல் பூங்கொத்து
-
Titan arum (Amorphophallus titanum) மடல் பூங்கொத்து, United States Botanic Garden
-
செங்கால் அல்லி(Flamingo Lily) (அந்தூரியம் andraeanum), United States Botanic Garden
-
Jack in the Pulpit (Arisaema triphyllum), Allegheny National Forest, Pennsylvania)
-
கால்லா அல்லி (Zantedeschia aethiopica), Funchal, Madeira
-
பிரேசில் Spathiphyllum மடல் பூங்கொத்து.
-
Typha latifolia மடல் பூங்கொத்து
-
Zantedeschia elliottiana வளர்ப்பின மடல் பூங்கொத்து. பொலனுடன் ஆண் பூக்கள் மேலும் பெண் பூக்கள் கீழும் அமைந்துள்ளன