ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஸ்ரீதேவி கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீதேவி கல்வி அறக்கட்டளையினால் 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சுயநிதி கலைக் கல்லூரியாகும்.[1] இந்த கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்துடன்[2] இணைந்த ஒரு இணை கல்வி நிறுவனம் ஆகும்.

ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2001
கல்வி பணியாளர்
12
மாணவர்கள்1593
அமைவிடம், ,
வளாகம்பொன்னேரி
சேர்ப்புசென்னை பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

அறிமுகம்

தொகு

ஸ்ரீ தேவி கலை அறிவியல் கல்லூரியில் நிர்வாக அறங்காவலர் திரு பி.ரமேஷ் ஆவார். திருமதி ஏ. ஸ்ரீதேவி, மற்றும் திருமதி ஜே. சுஜாதா கல்லூரி நிர்வாகிகள் ஆவர்.

அமைவிடம்

தொகு

இக்கல்லூரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி - தட்சூர் கூட்டு சாலையில் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது. இது பொன்னேரி நகரத்திலிருந்து 2 கி. மீ. தூரத்தில் உள்ளது. இந்த கல்லூரி சென்னை நகரம் மற்றும் அருகிலுள்ள பிற இடங்களுடன் தொடருந்து மற்றும் சாலை போக்குவரத்து சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், ஆங்கிலம் என 13 பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

தொகு