ஸ்ரீநாராயணபுரம் கோவில்

கேரளத்தில் உள்ள ஒரு சிவன் கோயில்

ஸ்ரீநாராயணபுரம் மகாவிஷ்ணு கோவில் (നാരായണപുരം) என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் காணப்படும் மிகவும் பழமையான விஷ்ணுவை வணங்கும் இந்து கோவிலாகும். இக்கோவில் அடூர் நகரில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மணகலா என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஸ்ரீநாராயணபுரம் கோவிலில் கொண்டாடப்படும் தசாவதாரச்சார்த்து உற்சவம் மிகவும் பிரபலமானதாகும். இந்தத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறும் மேலும் ஒவ்வொரு நாளும் மூலவர் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரத்திற்கு அலங்காரம் சார்த்தப்பட்டு அந்த அவதாரம் சிறப்பாக பக்தர்களால் போற்றப்படும். கேரளத்தில் தசாவதாரச்சார்த்து உற்சவம் கொண்டாடப்படும் சில கோவில்களில் ஸ்ரீநாராயணபுரம் கோவில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது.