ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்

ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் (பிருந்தன் ராகவ், யாழ்ப்பாணம்) ஈழத்துப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர் என அறியப்பட்டவர். இவர் 2004 ஆம் ஆண்டில் தனது முதல் இசை இறுவெட்டான "துளிகள்" இசைத்தொகுப்புக்கு இசையமைத்ததன் மூலம் கலை உலகில் பிரவேசித்தவர்.

ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்
பிறப்பு07.05.1979
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஇசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
பெற்றோர்சண்முகராகவன், தர்மகுலராணி
வாழ்க்கைத்
துணை
கௌரி
பிள்ளைகள்ஹரிநிகேஷ், ஹரிநிஷா
வலைத்தளம்
https://www.youtube.com/user/sbrunthan

வாழ்க்கைக்குறிப்பு தொகு

இவர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா கர்நாடக சங்கீத வித்வான் 'இசைப் புலவர்' என்.சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவரது தந்தை கர்நாடக சங்கீத வித்துவான் 'கலாசூடாமணி' திரு. எஸ் .சண்முகராகவன் ஆவார்.

கல்விப்புலம் தொகு

இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் மேற்படிப்பை கொழும்பு இரத்மலானை இந்து கல்லூரியிலும் கற்றவர்.

இசையமைத்த பாடல்கள் தொகு

 • காதல் பிசாசே[1][2][3]
 • கடலம்மா கடலம்மா...

இசைத்தொகுப்புகள் தொகு

 • துளிகள் (12 பாடல்கள் ) - 2004
 • நதியே (12 பாடல்கள் ) - 2005
 • நக்க்ஷத்ரா (15 பாடல்கள் ) - 2009
 • அஞ்சனா (11 பாடல்கள் ) - 2011
 • கிரிக்கெட் ஆல்பம்

´துளிகள்` இசைத்தொகுப்பு தொகு

துளிகள் இசைத்தொகுப்பு இவரால் இசையமைக்கப்பட்ட 12 பாடல்களுடன் 2004 இல் வெளிவந்த இசைத்தொகுப்பு ஆகும். பாடல்வரிகளை ஸ்ரீவிஜெய் ராகவன் எழுதியிருந்தார்.

துளிகள் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள் தொகு

 • ஒரு பொய் சொல்லாயோ நீ
 • உன்னில் என்னை கண்டேனடா
 • மேகம் இடம் மாறும்போது
 • பெண் பூவே
 • இனி எங்கள் பூமியில் யுத்தம் இல்லை
 • நெஞ்சோடு நீ நுழைந்து
 • தீண்டும் தீண்டும்


விருதுகள் தொகு

 • அரச விருது 2013 - கயல்விழி என் கயல்விழி... என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது)[4] [5]
 • அரச விருது 2013 - `அஞ்சனா´ இறுவெட்டுக்கு சிறந்த இறுவெட்டுத் தயாரிப்புக்கான விருது[6][7]
 • இளமை எப் எம் விருது 2016 - (சிறந்த இசையமைப்பாளர்)


மேற்கோள்கள் தொகு