ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப் பள்ளி
ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப் பள்ளி (Srimathi Sundravalli Memorial School) சென்னையின்பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும். பள்ளி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடப்பிரிவைப் பின்பற்றுகிறது. பள்ளிக்கு அதன் நிறுவனர் திரு.கே.சந்தானத்தின் தாயார் ஸ்ரீமதி சுந்தரவல்லி என்பவரின் பெயரிடப்பட்டது.[1]
1986 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி கல்வியாளர் மறைந்த குலபதி டாக்டர் பாலகிருஷ்ண ஜோஷி அவர்களால் திருப்பெரும்புதூர் வரத எத்திராஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் பள்ளி திறக்கப்பட்டது. இது இருபாலரும் படிக்கும் பள்ளியாகும். இங்கு மழலையர் முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. மேலும் இது புது தில்லி,நடுவண் இடைநிலைக் கல்வி வாரித்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Srimathi Sundaravalli Memorial School, Chromepet, Chennai: Admission, Fee, Facilities, Affiliation" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.