ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் (முதற்பகுதி)
நூலாசிரியர் | மகேந்திர நாத் குப்தர் (ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்) |
---|---|
உண்மையான தலைப்பு | The Gospel of Sri Ramakrishna[2] |
மொழிபெயர்ப்பாளர் | சுவாமி தன்மயானந்தர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | ஆன்மிகம் |
வெளியீட்டாளர் | இராமகிருஷ்ண மடம், சென்னை |
பக்கங்கள் | 619+57 |
ISBN | 81-7120-631-X(Set) |
அடுத்த நூல் | ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் (இரண்டாம் பகுதி) |
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், ’-ம’ என்றறியப்பட்ட மகேந்திரநாத் குப்தரின் டயரிக்குறிப்புகளின் தொகுப்பு நூல். ஸ்ரீராமகிருஷ்ணருடன் தொடர்பிலிருந்த அவரது முக்கியச்சீடரான சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவி, மற்ற நேரடிச் சீடர்கள்,பக்தர்கள் ஆகிய அனைத்து தரப்பினராலும், படிக்கும்போது மீண்டும் ஒருமுறை அந்த நாட்களுக்கே போய்விட்டதாகப் பாராட்டப்பட்ட நூல்.
முதற்தொகுப்பில், ’ம’ வின் டயரி எழுதும் பழக்கம் மற்றும் அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்க நேர்ந்த சூழ்நிலை, சுருக்கமான அளவிலான வாழ்க்கை வரலாறு ஆகியவையும், நூலின் வங்க மூலமான டயரி பக்கப் படம், ஆங்கில நூல், மொழிபெயர்ப்பு வரலாறு ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நூலின் முன்னுரையில், அமுதமொழிகள் ஓர் தெய்வமனிதரின் அனுபவ வார்த்தைகள்; உலகப்பொதுமறை; அமுதமொழிகளைப் படிப்போரின் அறிவுப்பின்னணி மற்றும் உணர்வின் விரிவைப் பொறுத்து பல்வேறு பொருளைத் தர வல்லவை என்பதையும், மாக்ஸ்முல்லர், ரோமா ரோலா, ஆர்னால்ட் டாய்ன்பீ என்று மேலை நாட்டு அறிஞர்களும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகளை எவ்வளவோ விவரித்துக் கூறியுள்ளனர் என்பதையும், சுவாமி விவேகானந்தர் தமது குருவின் ஒரு உபதேசத்திற்கு மட்டுமே மூன்று நாட்கள் பொருள் கூறக்கூடியவர் என்பதையும் கருத்தில் கொண்டு, நூலைப் படிப்பவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது.
அமுதமொழிகள் முதற்பாகத்தில் பலராம், நரேந்திரர் முதலான பக்தர்கள், ஈசுவரசந்திர வித்யாசாகர், பிரம்ம சமாஜத் தலைவர் கேசவர், விஜயகிருஷ்ண கோசுவாமி, வைணவ பக்தர்கள் என்று பலதரப்பட்டவர்களுடனான ஸ்ரீராமகிருஷ்ணரின் உரையாடல் மற்றும் அறிவுரைகள் நூலாசிரியரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை
- ↑ http://www.belurmath.org/gospel/
- ↑ http://www.callforbooks.com/tamil-books/1200-2303.html[தொடர்பிழந்த இணைப்பு]