ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sri Sankara Arts and Science college) சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைப்புப் பெற்ற கல்லூரியாகும். காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் கிராமப்பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது ஒரு சுயநிதிக் கல்லூரி. ஆடவர், பெண்டிரென இருபாலர்கள் இணைந்தும், சில துறைகளில் இருபாலர் அல்லாத வகையிலும், பயிலும் வகுப்பறைகள் அமையப்பெற்றுள்ளது. தற்போது தன்னாட்சித் தரம் பெற்றுச் செயல்படுகிறது. இக்கல்லூரி ஐ எஸ் ஓ 9001:2000 தரச்சான்று பெற்ற, காஞ்சி காமகோட்டிபீட அறக்கட்டளையின் ஒரு கல்வி நிறுவனமாகும்.[1]

ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ சங்கரா கலை உடன் அறிவியல் கல்லூரியின் முகப்பு தோற்றம்
குறிக்கோளுரைநட்பை வளர்த்துக்கொள்
வகைதன்னாட்சி
உருவாக்கம்1991 (1991)
சார்புசென்னை பல்கலைக்கழகம்
அமைவிடம், ,
12°51′39″N 79°44′1″E / 12.86083°N 79.73361°E / 12.86083; 79.73361
இணையதளம்www.sankaracollege.edu.in

துவக்கம்

தொகு

ஸ்ரீ சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரி காஞ்சி சங்கரமடம் கல்வி அறக்கட்டளையின் கீழ் 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.[2] இக்கல்லூரி தமிழ் மொழி பாடத்திட்டத்தில் பற்றுகொண்ட கல்லூரியாகும்.[3]

அமைவிடம்

தொகு

இக்கல்லூரி காஞ்சிபுரத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 76 கிமீ தொலைவிலும் ஏனாத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள்

தொகு

கல்லூரியில் நூலகம், ஆய்வகம், ஆடிட்டோரியம், கருத்தரங்கம், உணவுக்கூடம், உள்விளையாட்டு அரங்கம், வெளிவிளையாட்டு அரங்கம் மற்றும் இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. ":: Kalvimalar - Colleges - List of Medical and Engineering Colleges -Arts & Science Colleges - Colleges in India - Colleges in Tamilnadu - Colleges in State Wise - NAAC RATING COLLEGES". பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  2. "About us|History|இணையம் காணல்: சனவரி 19 2016". Archived from the original on 2016-01-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-19.
  3. tamil.oneindia/news/22-07-2010/(செயேந்திரர்)/தமிழ் கட்டாயம்[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

தொகு