ஸ்ரீ மாடு
ஸ்ரீ மாடு (Siri) என்பது பூட்டானில் இருந்து தோற்றிய ஒரு மாட்டு இனமாகும். இது தோளில் திமில் உள்ள மாட்டு இனமாகும். இவை சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் போன்ற பல்வேறு பகுதிகளில் இப்போது உள்ளன. [1]
பண்புகள்
தொகுஇவை பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலும் அல்லது முழுக்க கருப்பு நிறத்துடனும் இருக்கும். இந்த மாடுகள் பொதுவாக ஆண்டு முழுவதும் நீண்ட சடை முடி போர்த்திய உடலமைப்புடன் இருக்கின்றன. இவை பிற வகையான மாடுகளுடன் ஒப்பிடும்போது பொதுவாக பெரிய அளவானதாக உள்ளன. இவற்றின் கொம்புகள் வெட்டப்படாமல் இருந்தால் நீண்டு கூரானதாக இருக்கும். இந்த மாடுகளின் தோளில் திமிலுடன், வலுவான கால்களுடன் இருக்கும். இவற்றின் சக்திவாய்ந்த கால்களின் காரணமாக உழவுப் பணிகளில் பயனுள்ளதாக உள்ளன. மேலும் இதன் நீண்ட, சக்திவாய்ந்த கால்கள், இவை மலைகளில் வாழ ஏதுவாக உள்ளன. இந்த காளைகள் வலிமையான காளை இனங்கள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.fao.org/docrep/015/an469e/an469e07.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.