புஷ்பா தங்கதுரை

(ஸ்ரீ வேணுகோபாலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புஷ்பா தங்கதுரை (1931 - நவம்பர் 10, 2013) எனும் புனை பெயர் கொண்ட ஸ்ரீ வேணுகோபாலன் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுமார் 2 ஆயிரம் புதினங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மத, புனித யாத்திரைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

புஷ்பா தங்கதுரை 1931ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கீழநத்தம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரி உண்டு. 1949 இல் இவர் எழுதிய முதல் கதையை தினமணிக்கதிர் நாளிதழ் வெளியிட்டது. இவரிடம் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ‘ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த ஆர்.சீனிவாசன் என்ற எழுத்தாளருக்கு மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்த துணையாக இருந்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன்.[1].

விருதுகள்

தொகு
  • "மதுரகவி' நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது
  • அமுதசுரபி நாவல் பரிசு
  • சாவியின் 10-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது [2]

படைப்புகள்

தொகு
  1. என் பெயர் கமலா
  2. ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது
  3. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (கமல் நடித்த திரைப்படம்)
  4. தாய்லாந்து ராமாயணம்
  5. திருவரங்கன் உலா
  6. தேவை ஒரு பார்வை
  7. நந்தா என் நிலா
  8. பக்திக் கதைகள்
  9. மதுர விஜயம்
  10. மோகவல்லி தூது; 1979; அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307 லிங்கிசெட்டி தெரு, சென்னை-600 001

மற்றவை

தொகு
  • ஹிந்து நாளிதழில் அவருடைய படைப்பை குறித்து 2005ல் வந்த மதிப்பிட்டு கட்டுரை. [3]
  • ஹிந்து நாளிதழில் சென்னையின் ஞாபகங்கள் குறித்த அவரது 2010ல் வெளிவந்த ஆங்கில கட்டுரை [4]

மறைவு

தொகு

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புஷ்பா தங்கதுரை உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2 வார காலமாக உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த அவர் நவம்பர் 10ஆம் தேதி 2013ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[5] [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  2. http://m.dinamani.com/சென்னை/சென்னை-சென்னை/57886[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  4. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/memories-of-madras-turning-the-pages-of-time/article575918.ece
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  6. எழுத்தாளர் 'புஷ்பா தங்கதுரை' காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_தங்கதுரை&oldid=3752558" இலிருந்து மீள்விக்கப்பட்டது