ஹம்தாத் ஆய்வகங்கள்

ஹம்தாத் ஆய்வகங்கள் (Hamdard (Wakf) Laboratories) யூனானி மற்றும் ஆயூர்வேத மருந்து நிறுவனமாகும்.

1906 ஆம் ஆண்டு ஹாபிஜ் ஹ‌க்கிம் அப்துல் மஜித் என்பவரால் லாப நோக்கமற்ற அறக்கட்டளையாக டெல்லியில் துவங்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானிலும் இதன் கிளைகள் துவங்கப்பட்டன. அதன் பிரபலமான சில தயாரிப்புகளில் ரூஹ் அப்ஜா சர்பத், ஷபி என்னும் இரத்தம் சுத்திகரிக்கும் பானம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நிறுவனத்தின் வருமானங்கள் அதன் கீழ் செயல்படும் ஒரு தொண்டு கல்வி அறக்கட்டளைக்குச் செலவிடப்படுகின்றது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்தாத்_ஆய்வகங்கள்&oldid=2458898" இலிருந்து மீள்விக்கப்பட்டது