ஹம்போல்ட் அருவி
ஹம்போல்ட் அருவி
ஹம்போல்ட் அருவி | |
---|---|
ஹம்போல்ட் அருவி | |
அமைவிடம் | பியார்ட்லேண்ட், நியூசிலாந்து |
வகை | குதிரைவால் |
மொத்த உயரம் | 275 மீட்டர்கள் (902 அடி) |
நீர்வழி | ஹம்போல்ட் ஆற்றுப்பகுதி |
ஹம்போல்ட் அருவி (Humboldt Falls) என்பது நியூசிலாந்தின் பியார்ட்லேண்ட் மாவட்டத்தில் ஹோலிஃபோர்ட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அருவி ஆகும். இது 275 மீட்டர் உயரத்தில் மூன்று அடுக்குகளாக விழுகிறது. மூன்று அடுக்குகளில் உயரமானது 134 மீட்டர் உயரம் உடைய அடுக்காகும்.[1]
பயணப்பாதை
தொகுஹம்போல்ட் நீர்வீழ்ச்சி செல்லும் பாதையானது ஹோலிஃபோர்ட் சாலையிலிருந்து தொடங்குகிறது. ஹோலிஃபோர்ட் சாலைக்குச் செல்ல, மில்ஃபோர்ட் சாலையிலிருந்து திரும்ப வேண்டும். நீர்வீழ்ச்சியிலிருந்து திரும்பிச் செல்லும் பாதையின் பயண காலம் சுமார் அரை மணி நேரம், இந்த பாதை 600 மீ நீளம் கொண்டது. எளிதாகப் பயணம் மேற்கொள்ள இந்தப் பாதை நன்றாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Humboldt Falls in the World Waterfall Database". Archived from the original on 2007-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-11.
- ↑ "Humboldt Falls Track". Department of Conservation. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012.