ஹயக்ரீவர் (பௌத்தம்)

ஹயக்ரீவர் என்பது அவலோகிதேஷ்வரரின் ஒரு உக்கிர அவதாரம் ஆகும். 108 விதமான ஹயக்ரீவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹயக்ரீவர் நோய்களை அதிலும் குறிபாக தோல் நோய்க்ளை தீர்ப்பவராக நம்பப்படுகிறது. தொழுநோயைக்கூட குணப்படுத்தும் தன்மை உடையவரக இவர் நம்பப்படுகிறார். இவர் திபெத்திய பௌத்தத்தில் யிதமாகவும் வணங்கப்படுகிறார்.[1][2][3]

ஹயக்ரீவர்

திபெத்திய குதிரை வணிகர்கள் இவரை வணங்கியதாக கூற்ப்படுகிறது. ஏனெனில் இவர் குதிரையைபோல் கனைத்து அசுரர்களை விரட்டுவதாக அவர்கள் நம்பினர்.

சித்தரிப்பு

தொகு

இவர் ஒரு முகம், இருகரங்கள் மற்றும் இரு கால்களுடன் மிகவும் உக்கிரமாக காட்சிதருகிறார். இவரது மூன்று கண்களும் மிகவும் கோபம் கொண்டவையாக காணப்படுகின்றன. மேலும் இவருக்கு கோரப்பற்களும், மிகுந்த உக்கிரமும், பெருத்த உந்தியும், காணப்படுகின்றன. இவருடைய வலக்கரத்தில் வாளேந்தியவராக உள்ளார். மேலும் இவர் நாகாபரணங்கள் அனிந்தவராகவும் காணப்படுகின்றார். இந்த உக்கிர குணம், தடைகளை விலக்குவதற்காக உதவும் அவலோகிதேஷ்வரரின் கருணை குணத்தின் உறுதியை இது காட்டுகிறது. மேலும் இவர் குதிரை முகம் உடையவராகவும் காட்சி தருகின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "What's So Special...", Buddha Weeklyhttps://buddhaweekly.com/whats-special-hayagriva-wrathful-heruka-emanation-amitabha-horse-head-erupting-fiery-hair-literally-neighs-hrih-scream-wisdom/
  2. Kinley Dorjee, Iconography in Buddhism, Thimphu, Bhutan: Blue Poppy, 2018, 45.
  3. Hugo Kreijger (2001). Tibetan Painting: The Jucker Collection. Serindia Publications, Inc. pp. 106–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-906026-56-4. பார்க்கப்பட்ட நாள் 23 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயக்ரீவர்_(பௌத்தம்)&oldid=4106644" இலிருந்து மீள்விக்கப்பட்டது