ஹரியின் சமவெளி
ஹரியின் சமவெளி (Har Ki Doon), ஹரி கி டூன் என்ற சமசுகிருத சொல்லிற்கு ஹரியின் சமவெளி எனப் பொருள். இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில், கார்வால் கோட்டத்தில், சிவாலிக் மலைத் தொடரில், தொட்டில் வடிவத்தில் அமைந்த இச்சமவெளிப் பகுதி, பனி படர்ந்த கொடுமுடிகளுக்குக்கிடையே அமைந்துள்ளது. [1] இது பாஸ்பா சமவெளியை பொரசு கணவாய் வழியாக இணைக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்த ஹரியின் சமவெளி, அக்டோபர் முதல் மார்ச் மாதம் முடிய பனிக் கட்டிகளால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதி மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்குப் பொருத்தமான இடமாக உள்ளது. மலையேற்ற வீரகள் ஓஸ்லா, சீமா மற்றும் காங்காட் கிராமங்களிலிருந்து தங்கள் மலையேற்றப் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Har-Ki-Doon valley". பார்க்கப்பட்ட நாள் 2008-07-05.