ஹரிவான்ஷ் லால் பூன்ஜா

ஹரிவான்ஷ் லால் பூன்ஜா (13 1910 அக்டோபர் , பிரித்தானியாவின் இந்தியாவில் (அல்லது பின்னர், பஞ்சாப்)-லக்னோ செப்டம்பர் 6, 1997, இந்தியா). இவர் பாப்பாஜி என்று அழைக்கப்பட்டார். இரமண மகரிசியின் தன் விசாரனை (Self Enquiry) முறையினை பின் பற்றி பின்பு அதனை போதித்து வந்துள்ளார்.

ஹரிவான்ஷ் லால் பூன்ஜா

வாழ்க்கை வரலாறு

தொகு

பூன்ஜா சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்தவராவார். இப்போதுள்ள பாக்கிஸ்தானில், மேற்கு பஞ்சாப் மாகானத்தில், குஜ்ரன்வாலாவில் பிறந்தார். அவரது தாயார் சுவாமி ராம தீர்த்தா சகோதரி ஆவார்.

இரமண மகரிசியுடன் சந்திப்பு

தொகு

ஓரு நாள் அவர் லைலாபூரில் இருந்த போது ஓரு சாது அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடம் பூன்ஜா உங்களால் எனக்கு கடவுளை காட்ட இயலுமா, அல்லது எனக்கு கடவுளை காட்ட கூடியவரை காட்ட முடியுமா என்று வினவியுள்ளார். அதற்கு அந்த சாது தென்னிந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் உள்ள இரமண மகரிசியை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.[1]

1944ல் வாய்ப்பு கிடைத்தவுடன் அவர் திருவண்ணாமலை வந்து இரமண மகரிசி பார்த்து எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா என்று வினவினார். அதற்கு பின் வருமாறு பதிலளித்துள்ளார்:

கடவுளை என்னால் காட்ட இயலாது, எனெனில் கடவுள் என்பவர் காணக்கூடிய பொருள் அல்ல கடவுள் என்பவர் உள்ளது. காணும் பொருளினை தேடுவதை விடுத்து தேடுபவர் யாரெனெக் காண் என்றார்.

புத்தகங்கள்

தொகு
  • Godman, David (1998), Nothing Ever Happened, Volume One

மேற்கோள்கள்

தொகு
  1. "Papaji biography, Meeting Ramana Maharshi". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிவான்ஷ்_லால்_பூன்ஜா&oldid=3845076" இலிருந்து மீள்விக்கப்பட்டது