ஹரி ஆறு
ஹரி ஆறு அல்லது ஹெராத் ஆறு (Hari River or Herat River) ஆப்கானித்தானின் நடுவில் உள்ள மத்திய மாகாணமான ஹெராத் மாகாணத்தின் கோ-இ-பாபா எனுமிடத்திலிருந்து ஈரான் வழியாக துருக்மேனிஸ்தானின் காரகும் பாலைவனத்தில் மறைகிறது. இந்த ஆறு 1100 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. ரிக் வேதத்தில் ஹரி ஆறு பற்றிய குறிப்புகள் உள்ளது.
ஹரி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடுகள் | ஆப்கானித்தான்، ஈரான் மற்றும் துருக்மேனிஸ்தான் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கோ-இ-பாபா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | காரகும் பாலைவனம் |
நீளம் | 1,100 km (680 mi) |
வடிநில அளவு | 39,300 சகிமீ |
ஆப்கானித்தானின் நடுவில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரின் நீட்சியான கோ-இ-பாபா மலைத்தொடரில் ஹரி ஆறு உற்பத்தியாகி மேற்காக பாய்கிறது. பின் ஆப்கானித்தானின் மேற்கில் உள்ள ஹெராத் மாகாணத்தின் தெற்கில் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்து, ஜாம் ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் ஹரி ஆறு வடமேற்கு திரும்பி, பின் வடக்கு நோக்கி ஈரான் வழியாகப் பாய்ந்து, ஈரான்-துருக்மேனிஸ்தானின் தென்கிழக்கு எல்லையாக அமைகிறது. இப்பகுதியில் ஹரி ஆற்றில் குறுக்கே ஈரான்-துருக்மேனிஸ்தான் நட்புறவு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.[1]
ஹெராத் மாகாணத்தின் சிஸ்டி செரீப் மாவட்டத்தில் பாயும் ஹரி ஆற்றின் குறுக்கே இந்திய அரசு தனது செலவில் சல்மா அணை கட்டி கொடுத்தது. பின் சல்மா அணை என்ற பெயரை மாற்றி இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு அணை எனப் பெயரிட்டது.[2]
இந்த அணையில் இந்தியா அமைந்த புனல் மின் நிலையத் திட்டத்தின் மூலம் 42 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அத்தோடு 75,000 எக்டேர் நிலம் பாசன வசதி பெரும். இந்த அணை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆப்கான் ஜனாதிபதி ஆகியோரால் ஜூன் 4, 2016 அன்று திறந்துவைக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shroder, John F. (2016). "Hari Rud – Murghab River Basin". Transboundary Water Resources in Afghanistan: Climate Change and Land-Use Implications. Saint Louis: Elsevier. pp. 410–412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801861-3.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1535769
வெளி இணைப்புகள்
தொகு- UNESCO: Minaret of Jam (Press Release No.2002-41) and Minaret and Archaeological Remains of Jam (World Heritage List entry).
- University of Texas: A map showing the river (as 'Hariru').
- A mention of the Tedzhen river (inaccessible on 2013-06-26).