ஹவாய் உறவுமுறை
ஹவாய் உறவுமுறைப் பெயரிடல் குடும்பத்தின் உறவுமுறைகளைப் பெயரிடும் ஓர் முறையாகும். இது 1871ல் ஹென்றி லூயிஸ் மார்கன் என்பவரால் கண்டறியப்பட்டது. உள்ள உறவுமுறைகளில் இதுவே மிகவும் எளிய முறையாகும்.
ஹவாய் பெயரிடல் முறையில் பேசுபவரின் தந்தையும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் ஒரே பெயராலும் தாயும் அவருடைய தலைமுறையில் உள்ள அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர். இதே போல் பேசுவரின் சகோதரனும் அவரது தலைமுறையில் உள்ள அனைத்து ஆண்களும் சகோதரியும் அனைத்து பெண்களும் ஒரே பெயராலும் அழைக்கப்படுகின்றனர்.