ஹாம்லெட் (புரதப் பொருள்)

ஹாம்லெட் (HAMLET- Human Alpha lactaalbumin Made LEthal to Tumour) என்பது தாய்ப்பாலில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். இது நாற்பது வகையான புற்று அணுக்களை அழிக்கின்றது. ஹாம்லெட் என்கிற இந்த வேதிப்பொருள் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குக் கொடுக்கப்பட்டபோது இறந்த புற்றுநோய் உயிரணுக்கள் சிறுநீரில் காணப்பட்டன. இந்த வேதிப்பொருள் புற்றுநோய் உயிரணுக்களில் மட்டுமே செயற்படுவதும் தெரியவந்துள்ளது[1]. சிறுநீர்ப்பை புற்றுநோயே அன்றி மேலும் 40 வகையான புற்றுநோயிலும் இது நல்ல பயனைக் கொடுப்பதாக ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Gustafsson L, Hallgren O, Mossberg AK, Pettersson J, Fischer W, Aronsson A, Svanborg C. (2005). "HAMLET kills tumor cells by apoptosis: structure, cellular mechanisms, and therapy.". J Nutr 135 (5): 1299-303. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15867328. 
  2. Svanborg C, Agerstam H, Aronson A, Bjerkvig R, Düringer C, Fischer W, Gustafsson L, Hallgren O, Leijonhuvud I, Linse S, Mossberg AK, Nilsson H, Pettersson J, Svensson M. (2003). "HAMLET kills tumor cells by an apoptosis-like mechanism--cellular, molecular, and therapeutic aspects". Adv Cancer Res. 88: 1-29. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12665051. 

உசாத்துணை

தொகு
  • Times of India-----21-4-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாம்லெட்_(புரதப்_பொருள்)&oldid=4014231" இலிருந்து மீள்விக்கப்பட்டது