ஹிஜாப்

இஸ்லாமிய பெண்களின் பாரம்பரிய ஆடை

ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். ஹிஜாப் பொது வாழ்வில் உள்ள ஆண்கள் மத்தியில் பெண்களை பிரித்து பாதுகாக்கிறது. அது ஒரு மனோதத்துவ பரிமாணத்தை அர்த்தப்படுத்துகிறது. [1][2] ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் என்று பல பொருட்கள் உண்டு.[3]

தலைக்கு முக்காடு எனும் ஹிஜாப் அணிந்த துனீசிய நாட்டுப் பெண்

ஹிஜாப் விதி

தொகு

பெரும்பாலும் ஹிஜாப் அடக்கத்தின் சின்னம் ஆகும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம் உலக கலைக்களஞ்சியம் கூற்றின் படி ஹிஜாப் என்பது ஒரு தடுப்பு அல்லது கட்டுப்பாடு. இஸ்லாத்தில் ஹிஜாப் இருபாலருக்கும் உரியதாகும். ஆடையில் மட்டுமல்லாமல், பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு ஆண், பெண் இருவருக்குமே பொதுவானது.[4] சில இஸ்லாமிய சட்ட அமைப்புகள் வரையரை படி முகம், முழங்கைகள், மற்றும் முழங்கால் தவிர அனைத்தையும் உள்ளடக்கும் ஆடை ஹிஜாப் ஆகும்[1][5].

ஹிஜாப் நாள்

தொகு

உலக ஹிஜாப் நாள் பிப்ரவரி 1 ம் தேதி ஆகும். இதில் 140 நாடுகள் பங்கேற்கின்றன.[6] இத்தினத்தை ஆரம்பித்தவர் நஜ்மா கான்.[7] முதல் ஹிஜாப் தினம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Glasse, Cyril, The New Encyclopedia of Islam, Altamira Press, 2001, p.179-180
  2. Fisher, Mary Pat. Living Religions. New Jersey: Pearson Education, 2008.
  3. http://tamil.thehindu.com/opinion/letters/பெண்களுக்கு-மட்டும்தானா-ஹிஜாப்/article8178551.ece
  4. Encyclopedia of Islam and the Muslim World (2003), p. 721, New York: Macmillan Reference USA
  5. Fisher, Mary Pat. Living Religions. New Jersey: Pearson Education, 2008.
  6. Participating Countries. "Worldwide Support". World Hijab Day. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  7. "Nazma Khan (@NazmaHKhan) - Twitter". பார்க்கப்பட்ட நாள் 13 September 2016.
  8. "World Hijab Day". Facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிஜாப்&oldid=3632894" இலிருந்து மீள்விக்கப்பட்டது