ஹிமர்சா வெங்கடசாமி

ஹிமர்சா வெங்கட்சாமி (Himarsha Venkatsamy) என்பவர் ஒரு தென்னாப்பிரிக்க வடிவழகியும், நடிகையும் ஆவார், 2010 இல் கிங்பிசர் காலண்டர் ஹண்ட் வென்றதற்காக அறியப்பட்டவர், அஞ்சலி லாவனியா மற்றும் நிதி சுனிலை இறுதிச் சுற்றில் தோற்கடித்தார்.[1][2]

Himarsha Venkatsamy
2014 இல் வெங்கட்சாமி
பிறப்புடர்பன், தென்னாப்பிரிக்கா
தேசியம்South African
படித்த கல்வி நிறுவனங்கள்University of the Witwatersrand
பணிநடிகை, வடிவழகி, தொலைக்காட்சி தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
அப்துல்காதிர் அர்செனலிசுட்டை

இவர் 2010ல் ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் என்ற பாலிவுட் காதல் நகைச்சுவை திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்,[3] ரோர்: டைகர் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் இல் இவர் ஜும்பாவாக நடித்தார்.[4]

வாழ்க்கை

தொகு

ஹிமர்சா தென்னாப்பிரிக்காவின் டர்பனில் தென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க பெற்றோருக்குப் பிறந்தார். இவர் 13 வயதிலிருந்தே வடிவழகியாக இருந்து வருகிறார். இவர் தனது நீண்டகால கென்ய காதலரான அப்துல்காதிர் அர்செனலிசுட்டை மணந்தார்.

தொழில்

தொகு

ஹிமர்சா தனது சகோதரி தெருசுகாவுடன் கிங்பிசர் காலண்டர் கேர்ள் ஹன்ட் 2009 இல் பங்கேற்றார். என்டிடிவி குட் டைம்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போட்டியில் இவர் வெற்றி பெற்றார். முழுநேர வடிவழகியாக இருப்பதற்காக இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பு, விட்வாட்டர்சுராண்ட் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி மருத்துவம் படித்தார். இவர் 2009 லக்மே பேசன் வீக்கில் கலந்துக் கொண்டார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "A day in the life of: Sizzling hot Kingfisher model Himarsha Venkatsamy". lifestyle.in.msn.com. 2009-11-30. Archived from the original on 3 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
  2. "NDTV Good Times: Himarsha Venkatsamy". goodtimes.ndtv.com. 2009-10-30. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
  3. "A swimsuit calender [sic] auditions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2010-09-04. Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-04-15.
  4. "IndiaGlitz - From Kingfisher Model To Lady Of The Jungle In Roar Himarsha Venkatswamy Is Here To Stay! - Malayalam Movie News".
  5. "'My folks are cool about me modelling bikinis'".

வெளி இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹிமர்சா வெங்கடசாமி  

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமர்சா_வெங்கடசாமி&oldid=3946668" இலிருந்து மீள்விக்கப்பட்டது