ஹியூகோ வுட்
ஹியூகோ வுட் (Hugo Woods) (-1933) ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட் என்று அறியப்படும் இவர் ஆங்கிலேய அரசால் 1855 ஆம் ஆண்டு காடுகளைப்பாதுகாக்கும் சட்டம் இயற்றி அதன் வழிவகையின் மூலம் 1915 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வனக் காவலர் ஆவார்.[1] இவர் இந்தியாவில் தமிழ் நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆனைமலைப் பகுதியில் இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்க அனுப்பப்பட்டார்.[2]
அப்போதே இந்திய வனப் பணி படித்த இவர் டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள உலாந்தி பள்ளத்தாக்கில் மவுன்ட் ஸ்டுவர்ட் என்ற காடுகளின் நடுவே அமைக்கப்பட்ட தனி வீட்டில் குடியேறி வாழ்ந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னர் இவரின் உடல் இக்காடுகளுக்கிடையே நல்லடக்கம் [3] செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆனைமலையின் சிற்பி ‘ஹியூகோ வுட்’: இந்திய காடுகளை நேசித்த ஆங்கிலேய வன அலுவலர் தி இந்து தமிழ் 24 டிசம்பர் 2016
- ↑ Hugo Wood: The man who saved the Western Ghats லைவ் மின்ட் சன்டே 27 டிசம்பர் 2017
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- On the trail of a legend, நாளிதழ்: தி இந்து; நாள்: ஜூன் 2, 2008.