ஹிரகனா எழுத்துக்கள்
இறகனா எழுத்து(Hiragana (கன்ஜி எழுத்து முறையில்: 平仮名) ஜப்பான் மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை கட்டகனா, கன்ஜி எழுத்து முறைகள் ஆகும். கனா என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர்.
உயிரெழுத்து | யூன் | ||||||
あ அ | い இ | う உ | え எ | お ஒ | (ய) | (யு) | (யொ) |
---|---|---|---|---|---|---|---|
か க | き கி | く கு | け கெ | こ கொ | きゃ கிய | きゅ கியு | きょ கியொ |
さ ச | し ஷி | す சு | せ செ | そ சொ | しゃ ஷ | しゅ ஷு | しょ ஷொ |
た த | ち ச்சி' | つ ட்சு | て தெ | と தொ | ちゃ cha | ちゅ chu | ちょ cho |
な ன | に னி | ぬ னு | ね னெ | の னொ | にゃ ன்ய | にゅ ன்யு | にょ ன்யொ |
は ஹ | ひ ஹி | ふ ஃபு | へ ஹெ | ほ ஹொ | ひゃ ஹிய | ひゅ ஹியு | ひょ ஹியொ |
ま ம | み மி | む மு | め மெ | も மொ | みゃ மிய | みゅ மியு | みょ மியொ |
や ய | ゆ யு | よ யொ | |||||
ら ர | り ரி | る ரு | れ ரெ | ろ ro | りゃ ரிய | りゅ ரியு | りょ ரியொ |
わ வ | ゐ வி | ゑ வெ | を ஒ/வொ | ||||
ん ன் | |||||||
が ga | ぎ gi | ぐ gu | げ ge | ご go | ぎゃ gya | ぎゅ gyu | ぎょ gyo |
ざ za | じ ji | ず zu | ぜ ze | ぞ zo | じゃ ja | じゅ ju | じょ jo |
だ da | ぢ (ji) | づ (zu) | で de | ど do | ぢゃ (ja) | ぢゅ (ju) | ぢょ (jo) |
ば ba | び bi | ぶ bu | べ be | ぼ bo | びゃ bya | びゅ byu | びょ byo |
ぱ pa | ぴ pi | ぷ pu | ぺ pe | ぽ po | ぴゃ pya | ぴゅ pyu | ぴょ pyo |
பயன்பாடு
தொகுஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுபாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.(டோக்யோ - とうきょう(டொஉக்யொஉ)).
கன்ஜி எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை ஃபுரிகனா(Furigana) என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத கட்டகனா உபயோகப்படுத்தப்படுகிறது.