ஹிலியாம்போரா

ஹிலியாம்போரா
Heliamphora chimantensis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Ericales
குடும்பம்:
Sarraceniaceae
பேரினம்:
Heliamphora

Benth. (1840)
இனங்கள்

See text

Heliamphora distribution

ஹிலியாம்போரா (Heliamphora) என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சார்ந்த செடி ஆகும்.ஹிலியாம்போரா என்றால் கிரேக்க மொழியில் சூரியனின் சாடி என்று பொருளாகும்..[1] ஹிலியாம்போரா வகையில் மூன்று வகையில் 23 இனச்செடிகள் உள்ளன.[2] இது தென் அமெரிக்காவிலும் பிரித்தானிய கயானா பகுதியிலும் காணப்படுகிறது. இவை நீர்க்கசிவு உள்ள இடங்களில் வளர்கிறது. இவை பல பருவச் செடியாகும். இதன் தண்டு தரையில் ஊர்ந்து வளரும் மட்டத்தண்டு கிழங்காக இருக்கும். இதன் இலைகள் மட்டத்தண்டு கிழங்கிலிருந்து நேராக மேல்நோக்கி வளர்ந்திருக்கும். இவை ஒரு அடி முதல் இரண்டு அடி உயரம் வரை வளரும். இது வட்ட வடிவில் அமைந்திருக்கும். இதன் இலைகளே பூச்சிகளைப் பிடிக்கும் சாடிகளாக மாறியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mellichamp, T.L. 1979. The Correct Common Name for Heliamphora.PDF (196 KB) Carnivorous Plant Newsletter 8(3): 89.
  2. McPherson, S., A. Wistuba, A. Fleischmann & J. Nerz 2011. Sarraceniaceae of South America. Redfern Natural History Productions, Poole.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிலியாம்போரா&oldid=3925765" இலிருந்து மீள்விக்கப்பட்டது