ஹில்டனின் விதி

'மனித உடலில் ஒரு மூட்டுக்குச் செல்லும் நரம்பு அந்த மூட்டுக்கு நரம்பியக்கம் வழங்குவதோடு மட்டுமன்றி அம்மூட்டினை இயக்கும் தசைகளுக்கும் நரம்பியக்கம் வழங்கும்'[1] என்ற தனது அவதானிப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துலர் ஜான் ஹில்டன் 1860களில் வெளியிட்டார்.[2] அவர் பெயரால் அவ்விதி ஹில்டனின் விதி என்று அழைக்கப்படுகிறது.

விதியின் விரிவாக்கம்

தொகு

மேலே கண்ட விதியை நாம் இவ்வாறு விரிவாக்கலாம். மூட்டுக்கும் மூட்டினை இயக்கும் தசைகளுக்கும் நரம்பியக்கம் வழங்கும் நரம்பு அம்மூட்டின் மேல் உள்ள தோலுக்கும் நரம்புணர்ச்சி வழங்குகிறது. இதுவே மூட்டழற்சியில் எரிச்சலூட்டும் களிம்புகள் தடவி வலியைக் கட்டுப்படுத்துவதன் அடிப்படை ஆகும்

மேற்கோள்கள்

தொகு
  1. Moore, Keith L. et al. (2010) Clinically Oriented Anatomy, 6th Ed, p.633
  2. Hilton, J. (1863). On Rest and Pain: a Course of Lectures on the Influence of Mechanical and Physiological Rest in the Treatment of Accidents and Surgical Diseases, and the Diagnostic Value of Pain, delivered at the Royal College of Surgeons of England in the years 1860, 1861, and 1862
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்டனின்_விதி&oldid=2054509" இலிருந்து மீள்விக்கப்பட்டது