ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (பெப்ரவரி 27, 1807 – மார்ச் 24, 1882 Henry Wadsworth Longfellow) என்பவர் ஒரு உலகப்புகழ்பெற்ற கவிஞர்,கல்வியாளர் ஆவார். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் இயற்கை, கலாச்சாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து இருந்தன. புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ | |
---|---|
ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, photographed by Julia Margaret Cameron in 1868 | |
பிறப்பு | போர்ட் லேண்ட்,மெயின் , அமெரிக்கா. | பெப்ரவரி 27, 1807
இறப்பு | மார்ச்சு 24, 1882 கேம்பிரிஜ், மசாசுசிட், அமெரிக்கா | (அகவை 75)
தொழில் | கவிஞர் பேராசிரியர் |
இலக்கிய இயக்கம் | Romanticism |
துணைவர்கள் | Mary Storer Potter Frances Elizabeth Appleton |
பிள்ளைகள் | Charles Appleton Longfellow Ernest Wadsworth Longfellow Fanny Longfellow Alice Mary Longfellow Edith Longfellow Anne Allegra Longfellow |
கையொப்பம் | |
பிறப்பும்,கல்வியும்
தொகுஇவர் அமெரிக்காவின் போர்ட் லேண்ட் நகரில் 27.2.1807 இல் பிறந்தார்.[1][2] இவரது தந்தை ஒரு வழக்கறிஞர்.
கற்பதிலும் புத்தகம் வாசிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வத்தை இவரது தாயார் ஊக்கப்படுத்தினார். பல நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்.[3] பள்ளியில் மிகவும் கெட்டிக்கார மாணவர் என்று பெயர் பெற்றவர். தனது முதல் கவிதையை லாங்ஃபெல்லோ தனது 13ஆம் வயதில் வெளியிட்டார்.[4]
போடன் கல்லூரியில் தனது 15ஆம் வயதில் சேர்ந்தார். பட்டப் படிப்பு முடிப்பதற்குள் 40 கவிதைகளை வெளியிட்டார்.
பல்வேறு மொழிகளைக் கற்றல்
தொகுஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீசி போன்ற மொழிகளைக் கற்றார்.[5]
பணிகள்
தொகுஇவர் தன் படிப்பு முடிந்தபின் அவர் படித்த கல்லூரியிலேயே பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் நிறைய பாடப் புத்தகங்களை எழுதினார். 1836-ல் ஹார்வர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் பணியில் இருந்து 1853-ல் ஓய்வு பெற்று முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.
கவிதைத் தொகுப்புகள்
தொகு‘எ பில்கிரிமேஜ் பியாண்ட் த ஸீ’ என்ற பயண நூலை 1839இல் எழுதியுள்ளார். ‘வாய்சஸ் ஆப் த நைட்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ‘தி வில்லேஜ் ஆஃப் பிளாக்ஸ்மித்’, ‘த ரெக் ஆஃப் த ஹெஸ்பெரஸ்’ உள்ளிட்ட இவரது கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன.
மொழிப் பெயர்ப்புகள்
தொகுஐரோப்பா, ஆசியா, அரேபிய நாடுகளை சேர்ந்த பல புகழ்பெற்ற கவிதைகளைத் தொகுத்து 31 தொகுதிகளாக ‘போயம்ஸ் ஆஃப் பிளேசஸ்’ என்ற பெயரில் 1874-ல் வெளியிட்டார்.
1861-ல் உடையில் தீப்பற்றியதில் மனைவி இறந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு மழிக்க முடியாமல் போனதால் நீண்ட தாடி வளர்ந்தது. நாளடைவில் அதுவே அவரது அடையாளமானது. லாங்ஃபெல்லோ 75 வயதில் (1882) மறைந்தார்.
விருதுகள்
தொகு1859இல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. 2007-ல் அமெரிக்கா இவரது பெயரில் தபால் தலை வெளியிட்டது.