ஹெமிஸ் தேசியப் பூங்கா

ஹெமிஸ் தேசியப் பூங்கா (Hemis National Park) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள பூங்கா இது ஆகும். மேலும் நாட்டின் பெரிய மற்றும் தடைசெய்யப்பட்ட இயற்கை பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் பனிச்சிறுத்தை உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.

ஹெமிஸ் தேசியப் பூங்கா

வரலாறு

தொகு

1981 ஆம் ஆண்டு 600 சதுர கிலோமீட்டர் அளவில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா 1988-ல் 3350 சதுர கிலோமீட்டராகவும் பின்னர் 1990-ல் 4400 சதுர கிலோமீட்டராகவும் இருந்தது[1][2]. இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா ஆகும். இந்தப்பூங்காவினுள் 1600 மக்கள் வசிக்கின்றனர்.

செல்லும் வழி

தொகு
  • அருகிலுள்ள விமான நிலையம் லே விமான நிலையம்.
  • ஹிமாச்சல பிரதேசத்திலிள்ள கால்கா தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ளது.
  • லே-மணாலி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
  • அருகிலுள்ள நகரம் லே ஆகும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பராமரிப்பு

தொகு

இந்தப்பூங்கா இந்திய நடுவண் அரசாலும், ஜம்மு காஸ்மீர் அரசாலும் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெமிஸ்_தேசியப்_பூங்கா&oldid=3258957" இலிருந்து மீள்விக்கப்பட்டது