ஹெய்க்ரு ஹிடோங்பா

மணிப்புரியின் படகுத் திருவிழா

"ஹெய்க்ரு ஹிடோங்பா" (Heikru Hidongba) (மணிப்பூரி படகுப் பந்தய விழா) என்பது ஒவ்வொரு ஆண்டும் இம்பாலின் சகோல்பண்ட் பிஜோய் கோவிந்த லைகாயின் அகழியில் மெய்தே நாட்காட்டி மாதமான லாங்பன் (செப்டம்பருடன் இணைந்த) 11 வது நாளில் மதக் கூறுகளுடன் நடத்தப்படும் ஒரு சமூக-மத, படைப்பு மற்றும் பிற பாரம்பரிய நம்பிக்கைக்கான விழாவாகும்.[1]

ஹெய்க்ரு ஹிடோங்பா
ஹெய்க்ரு ஹிடோங்பா திருவிழாவில் பெண்கள்
கடைபிடிப்போர்மெய்தே மக்கள்
வகைமெய்தே
கொண்டாட்டங்கள்படகுப் பந்தயம்
நாள்மெய்தே நாட்காட்டியின்படி

வரலாறு

தொகு
 
ஹைக்ரு ஹிடோங்பாவின் காட்சி.

கி.பி 984 இல் மகாராஜா இரெங்பாவின் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட சமூகத்தில் அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பல சமூக-மத விழாக்களில் "ஹெய்க்ரு ஹிடோங்பா"வும் ஒன்றாகும். காலப்போக்கிலும், பல மன்னர்களின் ஆட்சியின் மூலமும், மெய்திகளின் மத வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. மகாராஜா பாக்யச்சந்திரன் காலத்தில் உச்சகட்டம் அடைந்தது. இந்த நேரத்தில், பாக்யசந்திர மன்னரின் மாமாவான மெய்திங்கு நோங்போக் லீரிகோம்பா (அனந்தசாய்) பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், பழைய மற்றும் புதியதை சரிசெய்யவும் கடுமையாக முயன்றார். [2]

ஹெய்க்ரு ஹிடோங்பாவின் நடவடிக்கைகள்

தொகு
 
விழாவில் பங்கேற்கும் பழங்குடியின பெண்கள்
 
விழாவில் பங்கேற்கும் பெண்கள்

சங்கீர்த்தனம் மற்றும் இசை முழக்கங்களுக்கு மத்தியில் தெய்வத்தின் முன்னிலையில் புனிதப்படுத்தப்பட்ட இரட்டைப் படகில், ஆரத்தியுடன் விழா தொடங்கப்படுகிறது. தெங்மைலெப்பா (படகைக் கவனித்துக்கொள்பவர்), ஹினாவ் ஷபா (படகை ஓட்டுபவர்), சாங் ஷபா (தெங்கமேலெப்பாவைக் கவனிப்பவர்), நூருங்பா (படகின் உள்ளே நீர் கசிவைக் கவனிப்பவர்) மற்றும் நவோமாங் ஷாபா (படகை ஓட்டுபவர்களுக்கு உதவுபவர்) பந்தயத்தின் முக்கிய பங்கேற்பாளர்களாவர். இவர்கள் இத்தகைய விழாக்களின் முறையான உடையின் பாரம்பரிய கூறுகளான நிங்காம் மற்றும் ஷாம்ஜிம் ஆகியவற்றை அணிவார்கள். மேலும் சில ஆபரணங்களும் இதில் அடங்கும். இதனுடன் விஷ்ணுவுடன் மன்னனும் இருப்பார். மன்னன் இருக்க முடியாவிட்டால், பாரம்பரிய அரச இருக்கை அமைக்கப்பட்ட இடத்தில் விஷ்ணு அமர்வார். பாரம்பரியத்திற்கு ஏற்ப, திருவிழாவிற்கு ஒரு நாள் முன்பு மன்னனுக்கும் கடவுள் விஷ்ணுவுக்கும் சடங்கு அழைப்பு வழங்கப்படுகிறது. மாலையில் படகுப் போட்டி நடைபெறுகிறது. படகின் இரு தலைவர்களும் (தெங்கமேலெப்பா) கடவுளுக்கு உரிய காணிக்கைகளுக்குப் பிறகு பந்தயத்தைத் தொடங்குவார்கள்.

சான்றுகள்

தொகு
  1. "Heikru-Hidongba Festival of Manipur, Heikru Hidongba Boat Festival".
  2. "Heikru Hidongba Cultural History of Manipur by Ch Jamini".

ஆதாரம்

தொகு
  • Heikru Hidongba published by Bijoy Govinda Sevayet Committee, Imphal
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெய்க்ரு_ஹிடோங்பா&oldid=3782663" இலிருந்து மீள்விக்கப்பட்டது