ஹெர்பெர்ட் ஹார்ட்லி

ஹெர்பெர்ட் கென்ட் ஹார்ட்லி (Herbert Kent Hartley, 1908-1986) ஒரு தொழில்துறை வேதியியலாளர். இவர் இங்கிலாந்தில் பாலியூரிதேன் பயன்பாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக, நெகிழி மற்றும் மீளி நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஒட்டும் தன்மையுடைய வெடிகுண்டிற்கான பிசினை உருவாக்கினார்.[1]

இவர் ஒரு சீரிய மலையேறும் வீரராவார். மான்செஸ்ட்ர் பல்கலைகழகத்தில் மலையேற்றக் குழுவை நிறுவியும், மலையேற்ற மீட்புக்குழுவின் செயளாலளராகப் பணியாற்றியும், மலையேற்றச் சுமைதூக்கும் குழுவின் தலைவராகச் செயல்பட்டும் இவ்விளையாட்டை இங்கிலாந்தில் நிலைநாட்டினார்.[2]

சக மலையேற்ற வீரர், ஃப்ரான்க் சாலரி, தி ஆல்பைன் சஞ்சிகையில், தன் இரங்கல் செய்தியில், ஹார்ட்லியை இங்ஙனம் புகழ்கிறார்:

அவருடைய பண்பு நலன்கள் உயர்வானவை. பல துறைகளைப் பற்றி உரையாடக் கூடிய அவர் எப்பொழுது அமைதியை மதிக்க வேண்டும் என்பதை அறிந்தவர். தாங்கமுடியாத வானிலைச் சூழலிலும், தன்னிலயையோ சிந்தையையோ இழக்காதவர். பிறரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா வண்ணம் அவருடைய அறிவு கட்டுப்படுத்தும் போதும் அவருடைய இயல்பான பணிவன்பினால் யாரையும் புண்படுத்தாதுவிடுத்தவர். பாறையில், அவருடைய நேர்த்தியான நளினமான உறுதியான நுட்பம் அவர் முன்னோடியாகத் திகழ்ந்த மணற்கல் ஏற்றத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sticky Bomb: The Production of the No 74 Grenade in Britain, Imperial War Museum
  2. Solari, Frank, "Herbert Kent Hartley 1908–1986" (PDF), Alpine Journal: 311–312
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்பெர்ட்_ஹார்ட்லி&oldid=2787642" இலிருந்து மீள்விக்கப்பட்டது