ஹெலினா லாங்ஹோர்ன் பவல்

ஹெலனா லாங்ஹோர்ன் பவல் (Helena Langhorne Powell) (1862-1942) இவர் ஒரு ஆங்கில வரலாற்றாசிரியரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். இவர் லீட்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், கேம்பிரிட்ஜ் பயிற்சி கல்லூரியின் முதல்வராகவும், லான்காஸ்டர் கேட் செயின்ட் மேரிஸ் பயிற்சி கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார். [1]

வாழ்க்கை தொகு

ஹெலனா லாங்கோர்ன் பவல் 1862 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவர் கிளாபம் உயர்நிலைப் பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ், நியூன்ஹாம் கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு இவர் 1884இல் வரலாற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். [2] இவர் 1885 முதல் 1892 வரை ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராகவும், 1892 முதல் 1903 வரை லீட்ஸ் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்தர். 1903 முதல் 1908 வரை கேம்பிரிட்ஜ் பயிற்சி கல்லூரியின் முதல்வராகவும், 1908 முதல் 1926 வரை செயின்ட் மேரி பயிற்சி கல்லூரியின் முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் 1942 சூன் 4, அன்று இறந்தார். [3]

படைப்புகள் தொகு

  • பள்ளிகளில் மத போதனை. ஒரு தாள் , 1905
  • மத ஆசிரியர்களாக பெண்கள், 1908
  • (பதிப்பு. ) பெட் வரலாறுகள்
  • இங்கிலாந்து மக்களின் வரலாறு; டியூடர்ஸ் அண்ட் ஸ்டூவர்ட்ஸ், 1929

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலினா_லாங்ஹோர்ன்_பவல்&oldid=2936930" இலிருந்து மீள்விக்கப்பட்டது