ஹெஸ் முக்கோணம்
ஹெஸ் முக்கோணம் என்பது நியூயார்க் நகரத்தின் வெஸ்ட் வில்லேஜ் சுற்றுப்புறத்தில் ஏழாவது அவென்யூ மற்றும் கிறிஸ்டோபர் தெருவின் மூலையில் அமைக்கப்பட்ட ஒரு முக்கோண மொசைக் தகடு ஆகும். அந்த தகட்டில் "பொது நோக்கங்களுக்காக ஒருபோதும் அர்ப்பணிக்கப்படாத ஹெஸ் எஸ்டேட்டின் சொத்து" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த தகடு ஒரு இருசமபக்க முக்கோணியாகும், இது 251⁄2 அங்குல (65 செமீ) அடிப்பகுதி மற்றும் 271⁄2 அங்குல (70 செமீ) பக்கங்களைக் கொண்டது.[1]
நகர அரசாங்கத்திற்கும், ஐந்து மாடி கட்டிடமான வூர்ஹிஸின் உரிமையாளரான பிலடெல்பியாவைச் சேர்ந்த நில உரிமையாளர் டேவிட் ஹெஸ்ஸின் எஸ்டேடிற்கும் இடையிலான தகராறின் விளைவே இத்தகடாகும். 1910 களின் முற்பகுதியில், ஏழாவது அவென்யூவையும் ஐஆர்டி ஸப்வேயையும் விரிவுபடுத்துவதற்கும் இப்பகுதியில் அமைந்திருந்த 253 கட்டிடங்களை இடிக்க நகர அரசாங்கம் உரிமைகோரியது . 1913ல், ஹெஸ் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளிலும் தோல்வியுற்றது. இருப்பினும், ஹார்ட்ஃபோர்ட் கோரண்டில் எழுதிய ரோஸ் டஃப் வைட்டாக்கின் கூற்றுப்படி, 1928 ஆம் ஆண்டில் ஹெஸ்ஸின் வாரிசுகள், நகர அரசாங்கம் வூர்ஹிஸைக் கைப்பற்றியபோது, நிலம் 55 இன் ஒரு சிறிய மூலையை கணக்கெடுப்பின் போது தவறவிட்டதைக் கண்டுபிடித்து, அவர்கள் உடைமைக்கான அறிவிப்பை அமைத்தனர்.[2] இந்த சிறிய நிலத்தை பொதுமக்களின் நடைபாதைக்காக நன்கொடையாக வழங்குமாறு நகரம் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டது, ஆனால் அவர்கள் மறுத்து, ஜூலை 27,1922 அன்று தற்போது அமைந்திருக்கும் மொசைக் தகட்டை நிறுவினர்.[2]
[3][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kim, Betsy (August 4–10, 2011). "Tiles Underfoot Recall Owner Who Put His Foot Down". The Villager (NYC Community Media) 81 (10) இம் மூலத்தில் இருந்து March 5, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305010725/http://thevillager.com/villager_432/tilesunderfoot.html.
- ↑ "Hess Triangle". Roadside America. பார்க்கப்பட்ட நாள் September 13, 2014.
- ↑ 3.0 3.1 Carlson, Jen (November 1, 2010). "Hess's Old Teeny Tiny Message to City". Gothamist இம் மூலத்தில் இருந்து June 14, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160614205814/http://gothamist.com/2010/11/01/teeny_tiny_private_piece_of_land.php.