ஹேட்விகர்-பின்சுலெர் சமனிலி

கணிதத்தில், ஹேட்விகர்-பின்சுலெர் சமனிலி (Hadwiger–Finsler inequality) என்பது ஒரு தளத்திலமைந்த முக்கோணம் குறித்த ஒரு வடிவவியல் முடிவாகும்.

முக்கோணத்தின் பக்கங்கள் a, b, c; பரப்பளவு T எனில்:

தொடர்புள்ள சமனிலிகள் தொகு

முக்கோணத்தின் பக்க நீளங்கள் a, b, c; பரப்பளவு T எனில்:

 

வெயிட்சென்பாக்கின் சமனிலியை ஈரோனின் வாய்பாட்டைப் பயன்படுத்தி நிறுவலாம். சமபக்க முக்கோணமாக ( a = b = c) "இருந்தால், இருந்தால் மட்டுமே," இச்சமனிலியின் (W) சமக்குறிக்கான முடிவு உண்மையாக இருக்கும்.

ABCD ஒரு குவிவு நாற்கரம்; அதன் பக்க நீளங்கள் a, b, c, d; பரப்பளவு T எனில்:[1]

 

இதில்,  

நாற்கரம் சதுரமாக இருந்தால் மட்டுமே இதிலுள்ள சமக்குறிக்கான முடிவு உண்மையாக இருக்கும்.

வரலாறு தொகு

இச்சமனிலி சுவிட்சர்லாந்தின் கணிதவியலாளர்கள் ஹூயூகோ ஹேட்விகர், பால் பின்சுலெர் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் இதனை பின்சுலெர்-ஹேட்விகர் தேற்றத்துடன் சேர்த்து 1937 இல் வெளியிட்டனர். பின்சுலெர்-ஹேட்விகர் தேற்றம் இரு சதுரங்களுடன் ஒரு உச்சியைப் பகிரும் மற்றொரு சதுரத்தை தருவித்தல் பற்றியதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Leonard Mihai Giugiuc, Dao Thanh Oai and Kadir Altintas, An inequality related to the lengths and area of a convex quadrilateral, International Journal of Geometry, Vol. 7 (2018), No. 1, pp. 81 - 86, [1]

வெளியிணைப்புகள் தொகு