ஹேன்ஸ் பீட்டர் அன்வின்


ஹேன்ஸ் பீட்டர் அன்வின் (Hans Peter Anvin, பிறப்பு: சனவரி 12, 1972) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி நிரலாளர் ஆவார். இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் திட்டத்தின் மூலம் அறியப்படுபவர். இவர் உருவாக்கிய SYSLINUX மிகவும் பிரபலமானது. லினக்சு வழங்கல்களில் துவக்க வட்டுகளுக்கு பெரும்பாலும் SYSLINUX பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர klibc, லினக்சு இயங்கு தளத்தில் பயன்படுத்தப்படும் பெயர்கள் மற்றும் எண்களின் பதிவு மையம் Linux Assigned Names and Numbers Authority (LANANA) மற்றும் பல Linux kernel hacks போன்றவைகளுக்கு முன்னோடியாவார்.

பீட்டர் அன்வின்
பிறப்புசனவரி 12, 1972 (1972-01-12) (அகவை 52)
Västerås,  சுவீடன்
இருப்பிடம்சான் ஜோஸ், கலிபோர்னியா
தேசியம்சுவீடன்
பணிகணிப்பொறி பொறியாளர்
பணியகம்Intel Corporation
அறியப்படுவதுSYSLINUX, Linux kernel
வாழ்க்கைத்
துணை
சூசி அன்வின், சூசன் எலிசபெத் எசர்
வலைத்தளம்
H. Peter Anvin's nonexistent home page

பீட்டர் அன்வின் Northwestern Amateur Radio Society (W9BGX)-ல் தலைவராக இருந்த போது, 1994 ஆம் ஆண்டு தனது பட்டயப் படிப்பை வடமேற்குப் பல்கலைக் கழகத்தில் முடித்தார். இவர் தற்பொழுது Intel திறந்த மூல தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேன்ஸ்_பீட்டர்_அன்வின்&oldid=3861664" இலிருந்து மீள்விக்கப்பட்டது